தற்போதைய செய்திகள்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

DIN

‘மார்க் ஆண்டனி’  படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் நடித்துள்ள திரைப்படம் ரத்னம். இந்தப் படத்தை இயக்குநர் ஹரி இயக்கியுள்ளார்.

தாமிரபரணி, பூஜை படங்களுக்குப் பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

நடிகர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் கார்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

ரத்னம் திரைப்படம் இன்று (ஏப்ரல் 26) வெளியாகியுள்ளது. படம் வருமா வராதா என்ற குழப்பத்திலேயே இருந்தது. இது குறித்து தனது மனக்குறையை பதிவிட்டுள்ளார் விஷால்.

தனது எக்ஸ் பதிவில் நடிகர் விஷால் கூறியதாவது:

இறுதியாக கட்டப்பஞ்சாயத்து எந்த பயமோ, வருத்தமோ இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது அதாவது தமிழ் சினிமா மற்றும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் குறிப்பாக இந்தாண்டு ரோலர்கோஸ்டர் சவாரியில் உள்ளனர். தியேட்டர் அசோசியேஷனின் அன்பான செயற்குழு உறுப்பினர்களே, கங்காரு நீதிமன்றங்கள் இன்றும் இருக்கிறது, இனிமேலும் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால் என்னைப் போன்ற ஒரு போராளியினால் இது வீழ்த்தப்படும்.

சற்று தாமதமானாலும் நிச்சயம் உங்களை நீதியின் மூலம் வீழ்த்துவேன். ஏனென்றால், எல்லா தயாரிப்பாளர்களும் குடும்பங்களைக் கொண்டுள்ளனர், வாழ்வாதாரத்திற்காக இங்கு வந்துள்ளனர்.திரைப்படங்களை பொழுதுபோக்குக்காக எடுப்பதற்காக அல்ல என்று நான் நம்புகிறேன். பொதுச் செயலாளராகவோ, நடிகராகவோ, தயாரிப்பாளராகவோ இதைச் சொல்லவில்லை. ஒரு முன்னாள் தயாரிப்பாளரின் மகனாக வியாழக்கிழமை மாலை தனது குழந்தையை (படத்தினை) பார்வையாளர்களுக்கு வழங்குவதற்காக என்னவெல்லாம் சந்தித்தேன் என்பதிலிருந்து சொல்லுகிறேன். தயாரிப்பாளர்களுக்காக பல சங்கங்களை வைத்திருப்பதற்கு என்ன காரணமென கடவுளுக்கு மட்டுமே தெரியும். இது உங்கள் அனைவருக்கும் அவமானம் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

சமையல் கலைஞரானார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

SCROLL FOR NEXT