ஆப்கானிஸ்தான்,தைவானில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது  
தற்போதைய செய்திகள்

ஆப்கானிஸ்தான், தைவானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவு!

ஆப்கானிஸ்தான்,தைவானில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

காபூல்: ஆப்கானிஸ்தான்,தைவானில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான்வெள்ளிக்கிழமை காலை 6.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 அலகுகளாகப் பதிவானதாகவும் அது 130 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் கூறினா்.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

தைவான் நிலநடுக்கம்

கிழக்கு தைவானில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் ஹுவாலியன் கவுண்டி ஹாலில் இருந்து தென்கிழக்கே 34.2 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகேலில் 6.3 அலகுகளாகப் பதிவானதாகவும் அது 9.7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் 9.7 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் மத்திய வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதற்குமேல் என்ன கேட்பது..!? தேசிய விருது குறித்து அட்லீ!

தீராத விளையாட்டுப் பிள்ளை... 9 வது திருமணத்தில் மாட்டிக் கொண்ட பெண்!

ஜார்க்கண்ட் அமைச்சர் ராம்தாஸ் சோரனுக்கு மூளையில் காயம்: தில்லி மருத்துவமனைக்கு மாற்றம்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம்

குற்றவாளி என தீர்ப்பு! நீதிமன்றத்தில் தனித்துவிடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா

SCROLL FOR NEXT