வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் வேகப் பந்துவீச்சாளர்களை நம்பி களமிறங்கும் பாகிஸ்தான்?
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அதிக அளவிலான வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அதிக அளவிலான வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி மழையினால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மழையினால் ஆட்டம் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதால், பாகிஸ்தான் அணி அதிக அளவிலான வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கலாம் எனக் கூறப்படுகிறது.
வேகப் பந்துவீச்சாளர்களான ஷாகின் ஷா அஃப்ரிடி, நஷீம் ஷா, மிர் ஹம்சா, குர்ரம் ஷேஷாத் ஆகியோர் முதல் டெஸ்ட்டில் விளையாட உள்ளதாக கூறப்படுகிறது. முதல் டெஸ்ட்டில் ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளரை (சல்மான் அலி அகா) பாகிஸ்தான் அணி களமிறக்கும் எனத் தெரிகிறது.
முதல் டெஸ்ட் போட்டிக்கான உத்தேச பாகிஸ்தான் அணி
அப்துல்லா சஃபீக், முகமது ஹுரைரா, ஷான் மசூத், பாபர் அசாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான், சல்மான் அலி அகா, ஷாகின் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, மிர் ஹம்சா, குர்ரம் ஷேஷாத் அல்லது முகமது அலி.