தமிழக அரசு 
தற்போதைய செய்திகள்

பத்திரிகையாளர் குடும்பநல நிதித் தொகை உயர்வு!

பத்திரிகையாளர் குடும்பநல நிதித் தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

பத்திரிகையாளர் குடும்பநல நிதித் தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழக அரசின் பரிசீலனைக்குப் பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது, பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும்போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.10,00,000/- (ரூபாய் பத்து லட்சம் மட்டும்) என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும்போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ. 7,50,000/- (ரூபாய் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும், 10 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும்போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) என்றும், 5 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும்போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.2,50,000/- (ரூபாய் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும் நடைமுறையிலுள்ள விதிகளின்படி, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிடுகிறது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தில் உதவி பெற உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையினைப் பெற்று இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழுவே இத்திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களையும் பரிசீலிக்கும். அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஆணைகள் வெளியிடப்படும்.

இத்திட்டத்திற்கான செலவினங்கள் "முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில்" இருந்து வழங்கப்படும். இக்குடும்ப உதவி நிதி திட்டம் அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் அமல்படுத்தப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாதஸ்வரம் சீரியலின் கின்னஸ் சாதனை குறித்துப் பேசிய நடிகை!

பூமியிலிருந்தும் வானிலிருந்தும் நெருப்புப் பிழம்புகள்! இது பாபா வங்காவின் ஆகஸ்ட் மாத கணிப்பு!!

இலக்குகளை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகள் அதிகளவில் கொள்முதல்! எதற்காக தெரியுமா?

வயநாட்டுக்குக் கூடுதல் கிராமப்புற சாலைகள் ஒதுக்க வேண்டும்: பிரியங்கா வலியுறுத்தல்

ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

SCROLL FOR NEXT