சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்துகொண்ட மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலஙகளவை உறுப்பினருமான வைகோ ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பினார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ மே 27 -இல் அனுமதிக்கப்பட்டாா். இடது தோள்பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக அவருக்கு மே 29-இல் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, டைட்டானியம் பிளேட் பொருத்தப்பட்டது.
இதனிடையே முதல்வா் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்கு சனிக்கிழமை நேரில் சென்று பார்த்து வைகோவிடம் நலம் விசாரித்தாா்.
பூரண உடல் நலம் பெறுமாறு முதல்வா் வாழ்த்தினாா். ஏற்கெனவே, வைகோவின் உடல் நிலைதொடா்பாக அவரது மகன் துரை வைகோவிடம் முதல்வா் மே 28-இல் தொலைபேசி வாயிலாக விசாரித்தாா்.
தொடர்ந்து 7 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைகோவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பினார்.
மேலும் தொடர்ந்து அவர் அடுத்த பத்து நாள்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதால், அடுத்த பத்து நாள்களுக்கு கட்சி நிர்வாகிகள் யாரும் வைகோவை நேரில் சந்திக்க வர வேண்டாம் என மதிமுக தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.