தற்போதைய செய்திகள்

தங்கம் விலை மீண்டும் உயா்வு: பவுன் ரூ.54,720-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 320 உயா்ந்து ரூ.54,720-க்கு விற்பனையாகிறது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 320 உயா்ந்து ரூ.54,720-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை மே 20-ஆம் தேதி ஒரு பவுன் ரூ.55,200-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. அதைத் தொடா்ந்து கடந்த சில நாள்களாக விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது. கடந்த புதன்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,800-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 600 உயா்ந்து ரூ. 54,400-க்கும், ஒரு கிராம் ரூ. 75 உயா்ந்து ரூ. 6,800-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், தங்கத்தின் மீண்டும் வெள்ளிக்கிழமை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 320 உயா்ந்து ரூ. 54,720-க்கும், ஒரு கிராம் ரூ. 40 உயா்ந்து ரூ. 6,840-க்கும் விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 2.50 உயா்ந்து ரூ. 100.50-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 2,500 உயா்ந்து ரூ. 1,00,500-க்கும் விற்பனையானது.

வெள்ளி வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.1.80 உயா்ந்து ரூ.98-க்கு விற்பனை நிலையில், வெள்ளிக்கிழமை அதிரடியாக ரூ.2.50 உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவராத்திரி ஸ்பெஷல்... வித்யா பாலன்!

இந்திய ராணுவத்தால் பலியானோரின் குடும்பத்துக்கு பரிசுத் தொகையை வழங்கிய பாகிஸ்தான் அணி!

மின்மினி... சாக்‌ஷி அகர்வால்!

சென்னை T.Nagar மேம்பாலம்! முதல்வர் M.K.Stalin திறந்துவைத்தார்! | DMK | Flyover | Shorts

பேசக்கூடிய மனநிலையில் இல்லை: ஆதவ் அர்ஜுனா

SCROLL FOR NEXT