கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் 3 பங்கரவாதிகள் சுட்டுக்கொலை: வெடிமருந்துகள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

DIN

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள கந்தோ, பதேர்வா பகுதியில் வியாழக்கிழமை காலை பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து தோடா நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜம்முவின் காவல்துறை அதிகாரி ஆனந்த் ஜெயின் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் உள்ள கந்தோ, பதேர்வா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அங்கு காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவும், ராணுவ வீரர்களும் இணைந்து வியாழக்கிழமை காலை தேடுதல் வேட்டை நடத்தினா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா்.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்திக்கொண்டே தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் நுழைந்தபோது, அவர்கள் மீது கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளிடம் இருந்து இரண்டு எம்-4 மற்றும் ஒரு ஏகே-47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாதிகள் தங்குவதற்கு வீடு கொடுத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயின் தெரிவித்தார்.

மேலும், அமர்நாத் யாத்திரைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், பயங்கரவாதிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் உள்ள கந்தோ பகுதியில் புதன்கிழமை நடைபெற்று வந்த தேடுதல் வேட்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதேபோன்று கன்டோ, பதேர்வா செக்டார் பகுதியில் நடந்து வரும் தேடுதல் வேட்டையில் மேலும் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று ஆனந்த் ஜெயின் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

SCROLL FOR NEXT