ஏரிக்குள் விழுந்தது, கூகுள் மேப்பை பின்பற்றிய கார்!
கூகுள் மேப்பை பின்பற்றி இயக்கிய கார், ஏரிக்குள் விழுந்து விபத்துள்ளானது.
கூகுள் மேப்பை பார்த்து கேரளத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த கார், இன்று காலை சேலம் மகுடஞ்சாவடி அடுத்த கனககிரி பகுதியில் சர்வீஸ் சாலை அருகில் உள்ள ஏரிக்குள் விழுந்தது.
இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டி வந்த ஓட்டுநர் உயிர் தப்பினார்.
இதனையடுத்து, தகவல் அறிந்த அந்த பகுதிக்கு வந்த படகு இயக்கம் தொழிலாளர்கள் மற்றும் கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது.
Advertisement
Advertisement
சமீப காலமாக பல பகுதிகளில் கூகுள் மேப் பார்த்து சென்ற வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் சூழல் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது .
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.