காங்கிரஸ் - பாஜக 
தற்போதைய செய்திகள்

ஹரியாணா: காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி!

ஹரியாணா பேரவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக...

DIN

ஹரியாணா மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில் கடந்த அக்.5-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. சுமாா் 2 கோடி வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின.

இங்கு கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இம்முறை ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக வாக்கு கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.

முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றக் கூடும் என்றும் கூறப்பட்டது.

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன், பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி(காலை 10 மணி), காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது.

பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை கைப்பற்ற இரு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஹரியாணா

காங்கிரஸ் - 46

பாஜக - 38

இதர கட்சிகள் - 6

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT