சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சி யூடியூப்
தற்போதைய செய்திகள்

புதிய சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சின்னத்திரை பிரபலம்!

சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் குறித்து...

DIN

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் தொலைக்காட்சியில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமையல் எக்ஸ்பிரஸ் என்ற புதிய சமையல் நிகழ்ச்சி வரும் செப். 15 ஆம் தேதி முதல் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதற்கான முன்னோட்டக் காட்சியும் வெளியாகியுள்ளது. இந்த முன்னோட்டக் காட்சியில் நடிகை சீதா நடித்துள்ளார். பாரம்பரிய மண் பாத்திரங்களில் சமையல் செய்வதுபோல் காட்சியாக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை ஆயிஷா.

இந்த நிலையில், சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியை சின்னத்திரை நடிகை ஆயிஷா தொகுத்து வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாயா தொடர் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் சின்னத்திரை நடிகை ஆயிஷா. இவர் சத்யா, ராஜா மகள், பொன்மகள் வந்தாள், செம்பருத்தி, சத்யா - 1, தவமாய் தவமிருந்து உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

இவர் சத்யா தொடரின் 2 ஆம் பாகத்தில் நாயகியாக நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் -6 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது, ஊர்வசிவோ, ராக்ஷசிவோ என்ற தெலுங்கு தொடரில் நாயகியாக நடித்து வரும் ஆயிஷா, சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குத் திருட்டு விவகாரம்: மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே வாக்குரிமைப் பேரணி! -தேஜஸ்வி

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அறிவிப்பு

டியர் ஸ்டூடன்ஸ் டீசர்!

வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி நாளை நேபாளம் பயணம்!

1300 நாள்கள்! சாதனைப் படைத்த விண்ணைத்தாண்டி வருவாயா!

SCROLL FOR NEXT