மத்திய ஆப்பிரிக்க நாடான கபோனில் ராணுவப் புரட்சிக்கு பின்னர் முதல் முறையாக அதிபர் தேர்தல் நடைபெறுகின்றது.
கபோன் நாட்டில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த முன்னாள் அதிபர் அலி போங்கோ ஒண்டிம்பாவின் குடும்ப ஆட்சியை கடந்த 2023-ம் ஆண்டு ஜெனரல் பிரைஸ் க்ளோடையர் நிக்யூமாவின் தலைமையிலான ராணுவம் கவிழ்த்தது. பின்னர் இடைக்கால அதிபரான பிரைஸ் அந்நாட்டில் ராணுவ ஆட்சியைப் பிரகடனப்படுத்தினார்.
இந்த ராணுவப் புரட்சியின்போது, எண்ணெய் வளமிக்க காபோன் நாட்டில் மக்களாட்சி அமைக்கப்படும் என அவர் உறுதியளித்திருந்த நிலையில் இன்று (ஏப்.12) அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்று வருகின்றது.
இந்தத் தேர்தலில் வாக்களிக்க, வெளிநாடுகளில் வாழும் கபோன் குடிமக்கள் 28,000-க்கும் மேற்பட்டோர் உள்ளிட்ட 9,20,000-க்கும் அதிகமான வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், அந்நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 3,000 வாக்குச்சாவடிகளில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கபட்டுள்ளது.
முன்னதாக, சுமார் 23 லட்சம் மக்கள் வாழும் காபோன் நாட்டில் எண்ணெய் வளமிருந்தும் பெருவாரியான மக்கள் வறுமையில் வாழுகின்றனர். இதனால், அந்நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் இந்தத் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய இடைக்கால அதிபர் பிரைஸ் பெருவாரியான வெற்றியடைந்து 7 ஆண்டுகள் ஆட்சியமைப்பார் எனக் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:சிம்ப்ஸன்ஸ் கார்டூனும் டிரம்ப்பின் உடல்நிலையும்! வெளியாகுமா அவரது மருத்துவ அறிக்கை?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.