அறிவுசார் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி ஆண்டு விழாவில் குழந்தைகளுடன் இணைந்து நடனமாடிய எம்எல்ஏ எழிலரசன்.  
தற்போதைய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி ஆண்டு விழாவில் நடனமாடிய காஞ்சிபுரம் எம்எல்ஏ

அறிவுசார் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி ஆண்டு விழாவில் எம்எல்ஏ எழிலரசன் திடீரென குழந்தைகளுடன் இணைந்து நடனமாடினார்.

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அறிவுசார் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி ஆண்டு விழாவில் எம்எல்ஏ எழிலரசன் திடீரென குழந்தைகளுடன் இணைந்து நடனமாடினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் வித்யா சாகர் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியின் 23 ஆவது ஆண்டு விழா ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,ஒன்றியக்குழு தலைவர் மலர்க்கொடி குமார்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா.மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் சிறப்பு செயலாளர் ஏ.கே.மணிமேகலை வரவேற்றார்.விழாவில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு அவரது சொந்த நிதியிலிருந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கினார்.

பின்னர் அக்குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது அமைச்சர் காந்தியுடன் அமர்ந்து கலைநிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்த காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் தீடீரென மேடைக்கு சென்று குழந்தைகளுடன் இணைந்து நடனமாடினார். எம்எல்ஏவின் குஷி நடனம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.குழந்தைகளின் பெற்றோர்களும் எம்எல்ஏ எழிலரசனை பாராட்டினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘டியூட்’ படப் பாடல்களை நீக்கக் கோரி இளையராஜா வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

சிவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

வளர்ச்சியடைந்த பாரதமே இலக்கு!

இந்தியாவின் உயிர்த்துடிப்பு!

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT