வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.7 கோடி அளவிலான தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
அசாமின் ஸ்ரீபூமி மாவட்டத்தின் புவாமாறா பகுதியில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் 50,000க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட யாபா எனப்படும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இதேப்போல் லோங்காய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 5,800 யாபா மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 2 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நல்லாட்சிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி: பிரதமர் மோடி!
இதுகுறித்து, அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
மதிப்பிற்குறிய போதைப் பொருள் கடத்தல் காரர்களே, உங்களது கேளிக்கை விருந்தைக் கெடுத்ததிற்காக ஸ்ரீபூமி காவல் துறையினரின் சார்பில் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், உங்களது ரூ.7 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் இன்று (பிப்.8) காலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, நாங்கள் தொடர்ந்து உங்களது கேளிக்கை விருந்துக்களை கெடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மெத்தபெட்டமைன் மற்றும் கேப்பைன் ஆகிய மூலப் பொருள்களினால் தயாரிக்கப்படும் யாபா போதை மாத்திரைகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.