இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் Dinamani
தற்போதைய செய்திகள்

ஈரானில் 3 இந்தியர்கள் மாயம்!

ஈரான் நாட்டிற்கு பயணம் செய்த 3 இந்தியர்கள் மாயமாகியுள்ளதைப் பற்றி..

DIN

ஈரான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட 3 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, ஈரான் நாட்டிற்கு வணிக ரீதியாக பயணம் மேற்கொண்ட மூன்று இந்தியர்கள் அந்நாட்டில் தரையிறங்கிய பின்னர் அவர்களது குடும்பத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு மாயமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: நாளைமுதல் யுபிஐ செயல்படாது? யாருக்கெல்லாம்?

இதனைத் தொடர்ந்து, 3 இந்தியர்கள் மாயமானது குறித்து தில்லியிலுள்ள ஈரான் நாட்டின் தூதரகத்திற்கும், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், ஈரானிலுள்ள இந்திய தூதரகமும் மாயமான இந்தியர்களின் பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈரான் அதிகாரிகளின் உதவியைக் கேரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்: துணை முதல்வர்

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

பூ, புதிதாய் பூத்திருக்கு... ஸ்வாதி சர்மா!

SCROLL FOR NEXT