கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

பிரான்ஸ் பெண் பாலியல் வன்கொடுமை: சுற்றுலா வழிகாட்டி கைது

திருவண்ணாமலை மகா தீப மலையில் தியானத்தில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியார் சுற்றுலா வழிகாட்டி கைது

DIN

திருவண்ணாமலை மகா தீப மலையில் தியானத்தில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியார் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த சுமாா் 46 வயது பெண், கடந்த ஜனவரி மாதம் திருவண்ணாமலைக்கு வந்தாா். இங்குள்ள தனியாா் விடுதியில் தங்கி ஆன்மிகம் மற்றும் தியானப் பயிற்சி மேற்கொண்டு வந்தாா். அண்மையில் மகா தீபம் ஏற்றும் மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு குகையில் அந்தப் பெண் தியானத்தில் ஈடுபட்டிருந்தாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு சென்ற சுற்றுலா வழிகாட்டி வெங்கடேசன், அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த வழியாகச் சென்ற பக்தர்கள் அவரை காப்பாற்றியதாக தெரிகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளித்தார்.

இதுகுறித்து, திருவண்ணாமலை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதையடுத்து, திருவண்ணாமலை பே கோபுரம் தெருவைச் சோ்ந்த தனியார் சுற்றுலா வழிகாட்டி வெங்கடேசன் (42) புதன்கிழமை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனா்.

ஜனவரி மாதம் ஆன்மீக சுற்றுலாவுக்காக வந்தவரை சுற்றுலா வழிகாட்டி வெங்கடேசன் பல்வேறு ஆசிரமங்களுக்கு அழைத்துச் சென்றது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் துப்பாக்கிச்சண்டை

தாய் - சேய்க்கு எச்ஐவி பாதிப்பு! 6 மாத மகன் கொலை!

சன் ஆஃப் சர்தார் - 2 சிறப்புக் காட்சி - புகைப்படங்கள்

பறந்து போ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலி: மத்திய அரசு

SCROLL FOR NEXT