பாமக நிறுவனர் ராமதாஸ்  IANS
தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு நாள்: ராமதாஸ் வாழ்த்து

தமிழ்நாடு நாளை முன்னிட்டு பாமக நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ச.ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாடு நாளை முன்னிட்டு பாமக நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ச.ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்,

தமிழ் மக்களுக்கு வாழ்த்துகள்... சுதந்திர இந்தியாவில் 69 ஆண்டுகளுக்கு முன்பு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1 இன்றைய நாள் தமிழ்நாடு நாள் மற்றும் தமிழர் தாயகத்தின் பொன்நாளாகும்.

மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான இந்த நாளை புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தெலுங்கானா போன்ற மாநிலங்கள் மிகப்பெரிய கொண்டாட்ட நாட்களாக மாநிலம் முழுவதும் கொண்டாடுகின்றன. அதேபோல் தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு நாள் விழா கலை, கலாசார, பண்பாட்டு பெருவிழாவாக, திருவிழாவாக கொண்டாடப்பட வேண்டும்.

உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் மண் செழிக்கவும், தமிழர்கள் இழந்த உரிமைகளை மீட்கவும் உலகத் தமிழர்கள் யாவரும் இந்நாளில் உறுதி ஏற்போம் என ராமதாஸ் கூறியுள்ளார்.

Tamil Nadu Day PMK Ramadoss wishes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசிபிக்கில் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT