முதுபெரும் எழுத்தாளர் கொ.மா. கோதண்டம்(87) மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்  
தற்போதைய செய்திகள்

முதுபெரும் எழுத்தாளர் கொ.மா. கோதண்டம் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

முதுபெரும் எழுத்தாளர் கொ.மா. கோதண்டம்(87) மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திச் சேவை

முதுபெரும் எழுத்தாளர் கொ.மா. கோதண்டம்(87) மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் படைப்புலகின் தலைசிறந்த படைப்பாளர் கொ.மா.கோதண்டம் (87) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணம் சனிக்கிழமை (அக்.4) மாலை இராஜபாளையத்தில் காலமானார். அவரது அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளர்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில்,

முதுபெரும் எழுத்தாளர் குறிஞ்சிச்செல்வர் கொ.மா. கோதண்டம் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். எளிய குடும்பத்தில் பிறந்து பஞ்சாலைத் தொழிலாளராக தமது வாழ்வைத் தொடங்கிய கோதண்டம், அதே எளிய மக்களுக்கான எழுத்தின் மூலமாக இலக்கிய உலகில் தடம்பதித்த மிகச்சிறந்த படைப்பாளி.

அதுமட்டுமின்றி சிறார்களுக்கான இலக்கியப் படைப்புகளிலும் பெரும் பங்களிப்பைச் செய்து, இன்றைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

பால சாகித்திய விருது, குடியரசுத் தலைவர் விருது, தமிழ்நாடு அரசின் இலக்கிய மாமணி விருது எனப் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இவரது நூல்கள், கடந்த 2025 ஏப்ரல் 5 அன்று நமது திராவிட மாடல் அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன என்பதையும் நினைவுகூர்கிறேன்.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த எழுத்தாளர் கொ.மா. கோதண்டம் மறைவு கலை, இலக்கிய உலகிற்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், சக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Gothandam passed away CM Condolence Message

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பருவதமலையில் ஏறிய பக்தா் கீழே விழுந்து உயிரிழப்பு

துறையூா் பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூா் அருகே 3 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

கரூா் புதிய பேருந்து நிலையம் இன்றுமுதல் செயல்படும்

SCROLL FOR NEXT