செய்திகள்

லக்கி டிராவில் 8 கோடி ரூபாய் பரிசு! அமீரகத்தில் ஒரு இந்தியருக்கு அடித்த யோகத்தைப் பாருங்கள்!

அமீரகத்தில் ‘பிக் 5 டிக்கெட் டிரா’  என்றொரு பரிசுக் குலுக்கல் போட்டி வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று அதில் ஜெயித்ததால் இன்று பத்திரிகைகளில் செய்தியாகி விட்டார் கிருஷ்ணம் ராஜூ தொகசிச்சி

RKV

அமீரகத்தில் ‘பிக் 5 டிக்கெட் டிரா’  என்றொரு பரிசுக் குலுக்கல் போட்டி வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று அதில் ஜெயித்ததால் இன்று பத்திரிகைகளில் செய்தியாகி விட்டார் கிருஷ்ணம் ராஜூ தொகசிச்சி எனும் இந்தியர்.

அபுதாபி விமானநிலையத்தில் நேற்று நடைபெற்ற பிக் 5,  லக்கி டிரா 181 வது தொடர் நிகழ்ச்சியில் டாப் 10 லிஸ்ட்டில் இருக்கும் அனைத்து மில்லியனர்களும் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரிலும் வென்றது கிருஷ்ணம் ராஜூ மட்டுமே. அதிலும் இவருடையது எப்படிப்பட்ட வெற்றி என்கிறீர்கள்? கிருஷ்ணம் ராஜூ, பிற போட்டியாளர்களைப் போலத் தன்னுடைய போட்டிக்கான டிக்கெட்டை இம்முறை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதால் இப்போது மொத்தப் பரிசுத் தொகையும் இவர் ஒருவருக்கே சொந்தம். அப்படி என்றால் இது சூப்பர் பம்பர் பரிசு தான் இல்லையா?

அபுதாபியில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனம் ஒன்றில் டீடெயில் செக்கராகப் பணிபுரிந்து கொண்டு மாதக் கடைசியில் கடனைக் கட்ட முடியாமல் பணத்துக்குத் திண்டாடிக் கொண்டிருந்த க்ரிஷ்ணம் ராஜூவுக்கு இது மிகப்பெரிய அதிர்ஷப் பரிசு! அமீரகப் பணத்தில் 5 மில்லியன் டாலர் என்றால் அதன் இந்திய ரூபாய் மதிப்பு 82719650.00 ரூபாய்.

பரிசு பெற்ற சந்தோஷத்தில் இருந்த கிருஷ்ணம் ராஜூ; இந்தச் செய்தி எனக்கு மிகப்பெரிய ஆனந்த அதிர்ச்சியை அளித்திருக்கிறது என்கிறார். எப்போதுமே நான் எனது மற்ற நண்பர்களுடன் சேர்ந்து பிக் 5 டிரா டிக்கெட் வாங்குவது தான் வழக்கம். ஆனால் இம்முறை... நான் மாதா, மாதம் பணம் சேமித்து அதைத் திரட்டி அதன் மூலமாக இந்த டிக்கெட்டை வாங்கி இருந்தேன். அப்படிச் செய்தது வீண் போகவில்லை. இப்போது இந்தப் பரிசை நான் யாருடனும் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை. இந்தத் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதத்தை நான் என் குழந்தையின் படிப்பிற்காக ஒதுக்கி வைப்பேன். என்கிறார் படு நிம்மதியாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து ஆக.8 முதல் ஒடிசாவில் காங்கிரஸ் போராட்டம்!

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான்!

திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை, கோவை காவல் நிலையத்தில் தற்கொலை! திமுக அரசுக்கு இபிஎஸ் கேள்வி

மத்திய அரசுத் துறைகளில் அதிகாரிப் பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு

அரசுத் திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்தலாம்! சி.வி. சண்முகத்துக்கு அபராதம் - உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT