செய்திகள்

‘வாட்ஸ்ஆப் வதந்தி’களின் மூலத்தைக் கண்டறிவது தொடர்பான இந்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது வாட்ஸ் ஆப்!

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆஃப் தளமானது தவறான தகவல்களையும், பொய் செய்திகளையும் அதிகம் பரவும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக மாறி வருகிறது.

RKV

வாட்ஸ் ஆப் வதந்திகளின் தொடக்கம் எங்கிருந்து உருவாகிறது என்பதை கண்டறிந்து அவற்றை புதிய தொழில்நுட்பத்தின் மூலம் தடுக்க உதவ வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை வாட்ஸ் ஆப் நிறுவனம் ஏற்க மறுத்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆஃப் தளமானது தவறான தகவல்களையும், பொய் செய்திகளையும் அதிகம் பரவும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக மாறி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பொய் செய்திகளால் உயிர் பலிகள் அதிகரித்த வண்ணமே உள்ளது. விழிப்புணர்வுகளையும் தாண்டி நன்கு படித்த மக்களுமே பொய்யான செய்திகளை உண்மை என நினைத்து பகிர்வதால் பொய்கள் சூழ்ந்த சமூகம் உருவாகி விட்டது.

இந்தியாவில் குறிப்பாக வாட்ஸ் ஆப் வதந்திகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை தடுக்க வதந்திகள் தடுப்பது தொடர்பான கோரிக்கையானது இந்திய அரசின் சார்பாக வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் வலியுறுத்தப்பட்டது. அதில், வாட்ஸ் ஆப் தளத்தில் ஒரு செய்தியின் தொடக்கத்தை ட்ராக் செய்யும் தொழில்நுட்ப தீர்வினை கண்டறிந்து அவற்றின் மூலம் வதந்திகளால் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் குற்றங்களை கூட ஒடுக்க முடியும் என்ற நோக்கத்தில் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

வாட்ஸ் ஆப் தலைவர் chris deniels இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை கடந்த வாரம் சந்தித்து பேசியுள்ளார். அவர்களின் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “ அரசின் சார்பாக வாட்ஸ் ஆப் நிறுவனம் இங்கு ஒரு நிறுவனத்தை அமைத்து, அதிகாரிகளை அமர்த்தி வாட்ஸ் ஆப் தளத்தில் பரவும் வதந்தி செய்திகளை கண்டறிய புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டதாக தெரிவித்து இருந்தார்.

“ கண்டறியும் கட்டமைப்பு ஒரு இடத்தில் இருந்து இறுதி இடத்திற்கான மறையாக்கத்தையும்( End to End Encryption privacy), வாட்ஸ் ஆப்பின் தனிப்பட்ட இயல்புத்தன்மையை வழுவடையச் செய்யும் , தீவிரமாக தவறான வழியில் உபயோகிக்க சாத்தியமானவற்றை உருவாக்கும். நாங்கள் வழங்கும் தனிப்பட்ட பாதுகாப்பு வழங்கலை வாட்ஸ் ஆப் பலவீனப்படுத்த முடியாது “ என்று வாட்ஸ் ஆப் செய்தித்தொடர்பாளர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் 1.5 பில்லியன் பயனர்களை கொண்ட வாட்ஸ் ஆஃப் இந்தியாவில் 200 மில்லியன் பயனர்களை கொண்ட மிகப்பெரிய தளமாக இயங்கி வருகிறது. FAKE NEWS தொடர்பான இந்திய அரசின் மிகப்பெரிய கோரிக்கையை வாட்ஸ் ஆப் நிறுவனம் நிகராகரித்து உள்ளது.

எனினும், வாட்ஸ் ஆப் சார்பில் சமீபத்தில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. Forward செய்திகளை 5 பேருக்கு மட்டுமே அனுப்ப முடியும், forward message என்ற குறியீடு உள்ளிட்டவைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், வாட்ஸ் ஆப் தரப்பில் இருந்து வதந்தி செய்திகள் கண்டறிவது பற்றிய நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வதந்திகள் வேண்டும் என்றே சிலரால் உருவாக்கப்படுகிறது. அதே நேரத்தில் சரியான தகவலை அறியாமல் பதிவிடும் கருத்துக்களாலும் உருவாகிறது. வதந்திகள் ஒழிய வேண்டும் என்றால் மக்களிடையே விழிப்புணர்வு உருவாவதை தவிர சிறந்த மார்க்கம் வேறெதுவுமில்லை!

Content Courtesy: www.youturn.in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்!

பங்குச் சந்தைகள் உயர்வுடன் வணிகம்!

Indian Racing திருவிழா 2025 தொடங்கியது! நடிகர் நாகசைதன்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!

சிசிடிவி காட்சிகள்: தேர்தல் ஆணைய பதிலுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

SCROLL FOR NEXT