செய்திகள்

அடேங்கப்பா... இங்க படியில உட்கார்ந்து ஃபோட்டோ/விடியோ எடுத்துக்கிட்டா 30,000 ரூபாய் அபராதமாமே!

கார்த்திகா வாசுதேவன்

ரோமின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான ‘ஸ்பானிஷ் படிகளில்’ அமர சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நகரம் கட்டுக்கடங்காத பார்வையாளர் கூட்டத்தால் திணறுவதால் ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்து புகைப்படம் மற்றும் விடியோ எடுத்துக் கொள்ள விரும்பும் சுற்றுலாப் பயணிகளின் ஆர்வக்கோளாறு காரணமாக இந்தப் உலகப் புகழ் பெற்ற சுற்றுலா சின்னம் சிதைந்து விட வாய்ப்பிருப்பதால் இத்தாலிய அரசு இப்படியோர் தடையை அறிவித்திருக்கிறது.

எனவே சமீபகாலங்களில் நகரின் சுற்றுலா போலீஸ் பிரிவானது நினைவுச் சின்னத்திலிருந்து மக்களை அகற்றும் வேலையில் ஈடுபடுத்தப் பட்டிருக்கிறது. போலீஸாரின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டை மீறியும் அங்கு அமர்ந்து எவரேனும் அதற்கு புகைப்படம் எடுக்க முயன்றால் அவர்கள் மீது விதிகளை மீறியவர்கள் என்ற குற்றம் சுமத்தப்பட்டு 250 யூரோ முதல் அபராதம் விதிக்கப்படுவதாக இத்தாலிய செய்தி நிறுவனமான ANSA தெரிவித்துள்ளது.

இவ்விஷயத்தில் சுற்றுலாப் பயணிகளால் படிகள் அழுக்கடைந்தால் அல்லது சேதமடைந்தால் அபராதத் தொகையானது 400 யூரோவாக உயருமாம். நம்மூர் இந்திய ரூபாய் மதிப்பில் 30,000 ரூபாய் அபராதம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

திடீரென ஏன் இப்படி ஒரு தடை விதிக்கப்பட்டது?

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஸ்பெயினின் படிகள் உட்பட மேலும் சில உலகப்புகழ் பெற்ற வரலாற்றுச் சின்னங்களில் ‘முகாமிடுதல்’ அல்லது ‘உட்கார்ந்து கொண்டு விடியோ/புகைப்படமெடுப்பது உள்ளிட்டவற்றை தடை செய்ய புதிய விதிகளை சபை அறிவித்தது. காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. காலம் கடந்தும் ரோமானிய கட்டடக் கலையின் சிறப்பை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இந்த புகழ்பெற்ற ஸ்பானிஷ் படிகளையும் இன்னபிற வரலாற்றுச் சின்னங்களையும் அவற்றின் அருமை தெரியாமல் சுற்றுலாப் பயணிகள் சிதைத்து விடக்கூடாதே என்று தான்.

ரோமைப் பொருத்தவரை, ஸ்பானிஷ் படிகள் உலக மக்களுக்கு பரிச்சயமாகத் தொடங்கியது 1953 ஆம் ஆண்டு வெளியான ரோமன் ஹாலிடே திரைப்பட வெளியீட்டுக்குப் பிறகு தான். ஆட்ரி ஹெப்பர்ன் மற்றும் கிரிகோரி பெக் ஆகியோர் நடித்த இத்திரைப்படத்தில் ஸ்பானிஷ் படிகள் வெகு அழகுற காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

உலகின் பார்வையில் ரோமானிய கட்டடக் கலைக்கு சான்று பகரும் படைப்புகளில் ஒன்றாக இந்தப் படிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ரோமானிய வரலாற்றுச் சின்னங்களில் பிரதானமான இந்தப் படிகளை 1723 மற்றும் 1726 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ஃப்ரான்செஸ்கோ டி சாங்டிஸ் எனும் கட்டடக்கலை வல்லுனரால் வடிவமைக்கப்பட்டன.

சுமார் 174 படிகளுடன் நீண்டு செல்லும் ஸ்பானிஷ்  படிகளின் உச்சிப்பகுதியானது நம்மை ட்ரினிடா டி மாண்டி தேவாலயத்திற்கு அழைத்துச் செல்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

SCROLL FOR NEXT