செய்திகள்

துரோணாச்சார்யா விருது பெற்ற ’டங்கல்’ புகழ் மல்யுத்த வீரர், மகளுடன் பாஜகவில் இணைந்தார்!

சரோஜினி

பாலிவுட் படமான 'டங்கல்' படத்திற்கு உத்வேகம் அளித்த மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகாட் மற்றும் அவரது பதக்கம் வென்ற மகள் பபிதா போகாட் ஆகியோர் திங்கள்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் சேரவுள்ளனர்.

ஜன்நாயக் ஜனதா கட்சியின் விளையாட்டுக் குழுவின் தலைவராக இருந்த மகாவீர் போகாட், அக்கட்சியில் நேர்ந்த செங்குத்துப் பிளவைத் தொடர்ந்து அங்கிருந்து விலகி பாஜகவில் இணைவதாக அறிவித்திருக்கிறார்.

மஹாவீர் போகாட்டிடம் பாஜகவில் சேருவதற்கான காரணங்களைக் கேட்டபோது , “நரேந்திர மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் நாங்கள் ஈர்க்கப்பட்டதால் பாஜகவில் இணைகிறோம்” என்று தெரிவித்தார்.

அத்துடன் சமீபத்தில் மோடி அரசு காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370 வது பிரிவின் விதிகளை ரத்து செய்த முடிவை அவர் பாராட்டினார், இது சரியான முடிவு என்றும் குறிப்பிட்டார்.

"370 வது பிரிவை அகற்றுவது மற்றும் இதே போன்று மத்திய அரசு தேசிய நலனுக்காக எடுத்த மேலும் பல முடிவுகள் என்னையும் என்னைப் போன்ற மில்லியன் கணக்கான நாட்டு மக்களையும் கவர்ந்துள்ளன. எனவே திங்களன்று தேசிய தலைநகரில் நடைபெறும் விழாவில் நாங்கள் பாஜகவுடன் இணைகிறோம் ”என்று துரோணாச்சார்யா விருது பெற்ற மகாவீர் போகாட் தொலைபேசியில் பி.டி.ஐ யிடம் தெரிவித்தார்.

ஹரியானாவில் உள்ள எம் எல் கட்டார் தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் அவர் பாராட்டினார், இது இளைஞர்களுக்கு "நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில்" வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடிய அரசாக இருப்பது பாராட்டுதலுக்கு உரியது என்றும் அவர் தெரிவித்தார்.

ஹரியானாவின் பிவானிக்கு அருகிலுள்ள பாலாலி கிராமத்தில் வசிப்பவர்கள், மல்யுத்த சகோதரிகள் பபிதா, கீதா. அவர்களது தந்தை மகாவீர் போகாட்டின் வாழ்க்கை அமீர்கான் நடித்த 'டங்கல்' படத்திற்கு உத்வேகம் அளித்தது. இந்நிலையில் தற்போது மகாவீரும், பபிதாவும் பாஜகவில் இணைய முடிவெடுத்திருக்கிறார்கள்.

மகள் பபிதா...

370 வது பிரிவு குறித்த மோடி அரசாங்கத்தின் முடிவுக்குப் பிறகு, பாஜக தலைமைக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்க பபிதா போகாட் கீழ்க்காணும் விதமாக ட்விட்டரில் வாழ்த்துகளைப் பகிர்ந்திருந்தார்.

“இந்த நாள் எப்போதும் நினைவில் இருக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு வணக்கம்.

ஜெய் ஹிந்த், ”என்று அவர் ட்வீட் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT