செய்திகள்

டூவிலரில் சென்றவர்களை விரட்டிச் சென்று மறைந்த புலி! வைரல் விடியோ

காட்டிலாக அலுவலர்கள் இருவர் தங்களது இரு சக்கர வாகனத்தில் சரணாலயத்தின் உள்ளே ரோந்து சென்று கொண்டிருக்கும் போது அவர்களை விரட்டிக் கொண்டு புலியொன்று சாலையின் குறுக்கே பாய்ந்து சென்ற காட்சி அதில் பதிவு செ

RKV

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இருக்கும் முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்தில் பதிவு செய்யப்பட்ட விடியோ ஒன்று நேற்றெல்லாம் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருந்தது. அந்த விடியோவில் அப்படி என்ன இருக்கிறது என்றால்:

காட்டிலாக அலுவலர்கள் இருவர் தங்களது இரு சக்கர வாகனத்தில் சரணாலயத்தின் உள்ளே ரோந்து சென்று கொண்டிருக்கும் போது அவர்களை விரட்டிக் கொண்டு புலியொன்று சாலையின் குறுக்கே பாய்ந்து சென்ற காட்சி அதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விடியோவை பதிவு செய்தவர்கள் காடுகள் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பிற்கென இயங்கும் தன்னார்வ அமைப்புகளில் ஒன்றைச் சார்ந்தவர்கள். அவர்க விடியோவைப் பதிவு செய்ததோடு அதைத் தங்களது அதிகாரப்பூர்வ முகநூல் தளமான (FAWPS) Forests and Wildlife Protection Society எனும் இணையப் பக்கத்தில் பதிவேற்றியும் இருந்தனர். அந்த விடியோ தான் இன்று வைரலாகிக் கொண்டிருக்கிறது. 

இந்த விடியோ கேரள மாநிலம் பயநாட்டில் பதிவானது என்று அச்சு ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்க,  கர்நாடகாவைச் சேர்ந்த டி வி 5 ஊடகம் இது நிகழ்ந்தது மைசூரு பந்திப்பூர் காட்டுப் பகுதியில் என்று செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையில் இந்த காட்சி பதிவானது எந்த வனவிலங்கு சரணாலயத்தில் என்றால் அது கேரளா, வயநாட்டுப் பகுதியில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் தான் என்பதாகத் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியாத்தத்தில் கிருபானந்த வாரியாா் சுவாமிகள் பிறந்த நாள்

இருசக்கர வாகனங்களை திருடியவா் கைது

ஏற்காட்டில் தனியாா் விடுதிகளில் போலீஸாா் ஆய்வு

ஏற்காட்டில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடத்தை ஆய்வுசெய்த ஏ.எஸ்.பி.!

சேலம் மாநகர காவல் துறையில் பயன்பாட்டுக்கு வந்த அதிநவீன வாகனங்கள்

SCROLL FOR NEXT