செய்திகள்

பிரதமர் அல்லது நிதி அமைச்சருடன் தேநீர் அருந்த நீங்க ரெடியா?

அதுமட்டுமல்ல மிக அதிக வரி செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் வழக்கமும் கூட வரும் 2019 நிதியாண்டில் இருந்து துவங்கப்படவிருக்கிறதாம்.

RKV

இந்தியாவில் அதிகமாக வரி செலுத்தக் கூடியவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், கெளரவிக்கும் விதமாகவும் பிரதமர் அலுவலகம் ஒரு சூப்பர் திட்டத்தை அறிவிக்கவிருக்கிறது. இந்தியாவில் யாரெல்லாம் முறையாகவும் மிக அதிக அளவிலும் வரி செலுத்துகிறார்களோ, அவர்கள், பிரதமர் அலுவலகம் சார்பாக தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட  இருப்பதாக இணையத்தில் ஒரு செய்தி உலா வருகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத இந்தச் செய்தியின் நம்பகத் தன்மை குறித்த சந்தேகம் இருந்தாலும், நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்காக மக்களிடையே முறையாக வரி செலுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்க மோடி தலைமையிலான மத்திய அரசு இப்படியான நடவடிக்கைகளை கையிலெடுக்க வாய்ப்பிருப்பதால் இந்தச் செய்தியை வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்.

அதுமட்டுமல்ல மிக அதிக வரி செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் வழக்கமும் கூட வரும் 2019 நிதியாண்டில் இருந்து துவங்கப்படவிருக்கிறதாம். புதிதாகப் பதவியேற்றிருக்கும் மத்திய அரசு வரும் ஜூலை மாதம் 2019 மற்றூம் 2010 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறது.

இந்த முயற்சிகளுக்கெல்லாம் முன்னதாக நாட்டில் முறையாக வரி செலுத்தி வருபவர்களை பாராட்டும் விதமாக வருமான வரித்துறையினர் தொடர்ந்து சான்றிதழ் அளித்துப் பாராட்டி வருவது வழக்கத்தில் உள்ள நடைமுறை தான்.

வருமான வரிச்சட்டத்தை சீரமைப்பதில் ஆர்வம் காட்டும் ஒரு குழுவினர் தங்களது அறிக்கையை வரும் ஜூலை இறுதியில் தாக்கல் செய்யவிருப்பதாகத் தகவல்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய பகுதியாக வரி சீர்திருத்தங்கள் இருக்கும் என்பது புதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே முன் வைத்த திட்டமே

தற்போது அமுலில் உள்ள வருமான வரிச்சட்டத்தின் படி; 

வருடாந்தம் ரூ.10 லட்சத்தை சம்பாதிக்கிற தனிநபர்கள் தங்கள் வருமானத்தில் 30 சதவிகித வரி செலுத்த வேண்டும்.

ரூ .50 முதல் ரூ.1 கோடி வரை வருவாய் சம்பாதிப்பவர்கள் 10 சதவிகிதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். 1 கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்கள் 15 சதவிகிதமாக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

வருடாந்திர வருமானம் ரூ.1 கோடிக்கு அதிகமாகவும் 10 கோடிக்குக் குறைவாகவும் இருக்கக்கூடிய உள்நாட்டு நிறுவனங்கள் 7 சதவிகித அதிக வரிப்பணத்தை கொடுக்கின்றன, அதே சமயம் அவை வெளிநாட்டு நிறுவனங்கள் எனில் அவற்றுக்கான கூடுதல் வரிவிகிதம் 2 சதவிகிதமாக திருத்தப்பட்டுள்ளது.

10 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுபவருக்கு உள்நாட்டு நிறுவனங்கள் எனில் 12 சதவீதமும், வெளிநாட்டு நிறுவனங்கள் எனில் 5 சதவிகிதமும் வரி விதிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT