செய்திகள்

திருமணமான 23 நாட்களில் கணவரை கைவிட்டு லெஸ்பியன் பார்ட்னருடன் வாழச்சென்ற இளம்பெண்!

இளம்பெண்ணின் லெஸ்பியன் பார்ட்னர் தேசிய அளவிலான விளையாட்டு வீரங்கனை என்பதாலும் அவர்களது வாதத்தை மறுக்க சட்டத்தில் இடமில்லை என்பதாலும் காவல்துறை அதிகாரிகள் அந்தப் பெண்கள் இருவரையும் அவர்களிஷ்டப்படி 

RKV

ராஜஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமான 23 நாட்களில் தன் கணவர் வீட்டிலிருந்து காணாமல் போனார். தற்போது அவர் இருக்குமிடத்தை கண்டறிந்துள்ளதாக ராஜஸ்தான் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் வசிக்கும் அந்தப் பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் தங்களது தேடுதல் வேட்டையைத் தொடங்கிய காவல்துறையினர் ஹரியானா மாநிலம் மானெசரில் அந்தப் பெண் வசிப்பதை கடந்த திங்களன்று கண்டுபிடித்தனர். 

அந்த இளம்பெண் தனது கணவரது வீட்டில் இருந்து கடந்த ஜூன் 1 ஆம் தேதியன்று வெளியேறி ஹரியானாவில் வசிக்கும் தனது லெஸ்பியன் பார்ட்னருடன் வாழத் தொடங்கி இருக்கிறார். இவர்கள் இருவருக்குமான உறவு இன்று நேற்று தொடங்கியதில்லையாம், கடந்த 4 வருடங்களாக இவர்கள் உறவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவரது புகாரின் அடிப்படையில் அவர்கள் இருவரையும் கஸ்டடியில் எடுத்த காவல்துறையினர் மாஜிஸ்ட்ரேட்டின் முன்னிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அப்போதும் அவர்கள் இருவரும் தங்களது நிலை குறித்து வாதிட்டனர். தாங்கள் இருவரும் வயது வந்தவர்கள் என்பதால் தங்களுக்கான துணை மற்றும் வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாக அவர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். அத்துடன் தனக்கு நடந்த திருமணமே குடும்பத்தாரின் வற்புறுத்தலின் அடிப்படையில் வலுக்கட்டாயமாக நிகழ்ந்தது என்பதால் தன்னால் அந்த உறவில் நீடிக்க முடியாது என்றார் ராஜஸ்தானிய இளம்பெண்.

இளம்பெண்ணின் லெஸ்பியன் பார்ட்னர் தேசிய அளவிலான விளையாட்டு வீரங்கனை என்பதாலும் அவர்களது வாதத்தை மறுக்க சட்டத்தில் இடமில்லை என்பதாலும் காவல்துறை அதிகாரிகள் அந்தப் பெண்கள் இருவரையும் அவர்களிஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் சென்று வாழலாம் எனக் கூறி சுதந்திரமாகச் செல்ல அனுமதித்து விஷயத்தைச் சுமுகமாக முடித்து வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

பஞ்சாப் வெள்ளம்: மீட்புப் பணியில் முதல்வரின் ஹெலிகாப்டர்!

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

SCROLL FOR NEXT