செய்திகள்

பாகிஸ்தானில் ஒரு செல்லூர் ராஜூ!

வழக்கறிஞர் சி.பி. சரவணன்

பாகிஸ்தானின், கராச்சி பகுதி விவசாய நிலங்களில் தற்போது வெட்டுக்கிளிகளின் தொல்லை தாள முடியாமல் அங்குள்ள விவசாயிகள் அவஸ்தைப் பட்டு வருகின்றனர். பலுசிஸ்தான் கடற்கரையில் பெருமளவில் காணப்படும் வெட்டுக்கிளிகள் சமீபகாலமாக கராச்சி பகுதிக்கு பெருந்திரளாக வந்து சேர்ந்திருக்கின்றன. பயிர்களை நாசம் செய்யும் இந்த வெட்டுக்கிளிகளின் தொல்லையிலிருந்து எப்படி விடுபடுவது எனத் தெரியாமல் அங்குள்ள விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் விவசாயிகளின் இப்பிரச்னை அரசு வரை செல்ல, சிந்து மாகாண அமைச்சரான இஸ்மாயில் ரஹோஅதற்கொரு தீர்வு சொல்ல முயன்றது தான் தற்போது அவரை ‘பாகிஸ்தானின் செல்லூர் ராஜூ’ என இணையவாசிகள் கிண்டலடிக்கும் அளவுக்கு ஆளாக்கி இருக்கிறது. 

இத்தனைக்கும் இஸ்மயில் ரஹோ அப்படியொன்றும் பிரமாதமான ஐடியா எதையும் சொல்லி விடவில்லை. அவர் , சாதாரணமாக அப்பகுதி மக்கள் பின்பற்றி வரும் முறையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். அதை பகடி செய்து சிரிக்கிறார்கள் நெட்டிஸன்கள். அப்படி என்ன சொல்லி விட்டார் பாகிஸ்தான் செல்லூர் ராஜூ என்கிறீர்களா?

‘பொதுமக்கள் இந்தச் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெட்டுக்கிளிகளைப் பிடித்து, சமைத்து பிரியாணி முதலிய உணவுகளை தயார் செய்து சாப்பிடுங்கள், மக்களுக்கு உணவாக மாறுவதற்காகத்தான் இந்தப் பூச்சிகள் இங்கே வந்துள்ளன’ 

- எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல, இந்த வெட்டுக்கிளிகளால் பயிர்களுகு எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

என்ன இருந்தாலும் முதலில் சொன்ன ஆலோசனையை நெட்டிஸன்கள் சும்மா விடுவதாக இல்லை. அவரது வெட்டுக்கிளி பிரியாணி யோசனையை வைத்து நெட்டிஸன்கள் அவரைக் கீரை கடைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நிஜம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT