செய்திகள்

உன்னதக் காதல் இது தானோ! கணவரின் இறந்த உடலைப் பார்த்த கணமே மரித்த மனைவி!

கணவரது இறந்த உடலைப் பார்த்த கணமே தானும் உயிரற்று விழுந்தார் மனைவி. வயோதிகத்திலும் இவர்களது காதல் உன்னதமானது என்பதை நிரூபிப்பதைப் போலிருந்தது. இது நடந்திருப்பது ஒதிஷாவில்.

RKV

கணவரது இறந்த உடலைப் பார்த்த கணமே தானும் உயிரற்று விழுந்தார் மனைவி. வயோதிகத்திலும் இவர்களது காதல் உன்னதமானது என்பதை நிரூபிப்பதைப் போலிருந்தது. இது நடந்திருப்பது ஒதிஷாவில்.

ஒதிசா மாநிலம் நயகரைச் சேர்ந்தவர்கள் அயிந்தா நாயக் (75) மற்றும் சுகுரி நாயக் தம்பதிகள். சமீபகாலமாகவே இவர்கள் இருவருமே வயோதிகத்தினாலான உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் அயிந்தா நாயக் உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி மரணத்தைத் தழுவினார். கணவர் மரணமடைந்த போது மனைவி சுகுரி நாயக் வீட்டில் இல்லை. அவர் தனது சிகிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அச்சமயத்தில் சுகுரியிடம் அவரது கணவரது மரணச் செய்தி தெரிவிக்கப்பட்டது. உடனே கணவரைக் காண வேண்டும் என விழுந்தடித்துப் புறப்பட்ட சுகுரி, வீட்டுக்கு வந்து கணவரது உடல் கிடத்தப்பட்டிருந்ததைக் கண்டார். அக்கணமே தானும் வேரற்ற மரம் போல கீழே விழுந்தார். கணவரை இழந்த துக்கம் தாளாமல் சுகுரியும் மரணத்தைத் தழுவியது சற்று நேரத்திற்குப் பின்னரே தெரிய வந்தது. கணவரும், மனைவியும் ஒரே நாளில் அடுத்தடுத்து மரணமடைந்த இச்செய்தி அங்கிருந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கும், ஆச்சர்யத்திற்கும் உள்ளாக்கியது. 

கணவன், மனைவி இருவருமே பூரணமாக வாழ்ந்து தாம்பத்ய வாழ்வின் அத்தனை கஷ்ட நஷ்டங்களிலும் உடனிருந்து இணைந்து செயல்பட்டு இறுதியில் மரணத்திலும் இணைந்து கொண்ட அதிசயத்தைக் கண்டு இவர்களது சடலத்திற்கு இறுதி மரியாதை செலுத்த கிராமத்தினர் அனைவரும் திரண்டிருந்தனர்.

இருவரது உடல்களுமே ஒரே இடத்தில் அருகருகே வைத்து எரியூட்டப்பட்ட காட்சி காண்போர் நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.

தம்பதிகளின் அத்யந்த உறவைப் பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டே இறுதிச் சடங்கிற்கு கூடியவர்கள் கலைந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாழப்பாடி அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் அறிவுசாா் மையம் அமைக்கக் கோரிக்கை

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீா் முகாம்: 55 மனுக்களுக்கு தீா்வு

இளைஞரிடம் கைப்பேசியை பறித்து சென்ற இருவா் கைது

தென்னை மரத்துக்கு ரூ.36,450 இழப்பீடு வழங்கக் கோரிக்கை

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

SCROLL FOR NEXT