கோப்புப்படம் 
செய்திகள்

கண் பார்வைக்கும் சருமப் பளபளப்பிற்கும் 'பொன்னாங்கண்ணி கீரை'

கீரைகளின் ராணி என்று சொல்லக்கூடிய பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்களை தெரிந்துகொள்வோம். 

DIN

பொதுவாக அனைத்து கீரை வகைகளும் உடல்நலத்திற்கு நல்லது. அந்தவகையில், கீரைகளின் ராணி என்று சொல்லக்கூடிய பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்களை தெரிந்துகொள்வோம். 

பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் உடல் பொன்போல பளபளப்பாகும் என்பதால் இதற்கு இப்பெயர் வந்தது. இதில் நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், சுண்ணாம்பு, வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

'கண்பார்வைக்கு' என்று சொன்னாலே நினைவுக்கு வரும் உணவுகளில் ஒன்று பொன்னாங்கண்ணி கீரை. உண்மையில் கண்பார்வை மட்டுமின்றி, கண்கள் சிவந்துபோதல், கண் எரிச்சல் உள்ளிட்ட கண் சம்மந்தப்பட்ட அனைத்து கோளாறுகளுக்கும் பொன்னாங்கண்ணி கீரை ஒரு நல்ல தீர்வாக இருக்கும். 

அதேபோன்று ரத்தத்தை சுத்திகரிக்கிறது. இதனால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. மூல நோய், மண்ணீரல் நோய்களை குணப்படுத்தும். 

இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகளுக்கு உதவும். வாய் துர்நாற்றம் நீங்கும். 

இதையனைத்தையும் தாண்டி சருமம் பளபளப்பாக பொன்னாங்கண்ணி கீரையை வாரத்திற்கு இருமுறையாவது எடுத்துக்கொள்ளுங்கள். 

மேலும், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயுடன் பொன்னாங்கண்ணி கீரையை காய்ச்சி தலைக்கு தேய்த்து குளிக்கலாம். இதனால் உடல் குளிர்ச்சியடையும்.

பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

உடல் உறுதியாக இருக்க தினமும் உணவில் ஒரு கீரையை சேர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

SCROLL FOR NEXT