கோப்புப் படம்.
கோப்புப் படம். 
செய்திகள்

உறக்கம் மட்டுமே ஓய்வல்ல, ஓய்வில் ஒன்றுதான் உறக்கம்!

இணையதள செய்திப்பிரிவு

மனித உடலுக்கு ஓய்வு என்பது மிகவும் முக்கியம் என்பதை பலரும் அறிந்திருக்கிறார்கள்தான். ஆனால், ஓய்வு சென்றாலே, அது குறிப்பாக உறக்கம் என்றுதான் பலரும் நினைத்திருக்கிறார்கள்.

ஆனால், உறக்கம் மட்டுமே உடலுக்குத் தேவைப்படும் ஓய்வு அல்ல என்பதையும், உடலுக்கு பல ஓய்வுகள் தேவைப்படும். அவையும் அவ்வப்போது மனிதர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் உடல்நல நிபுணர்கள்.

இது குறித்து மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், ஓய்வு என்றாலே உறக்கம் என்று நினைத்துக் கொள்கிறோம். சிகிச்சைக்காக வருபவர்களும், நான் தினமும்தான் நன்றாக துங்குகிறேனே என்கிறார்கள் பலரும். ஆனால், ஓய்வு என்பது பல வழிகளில் உள்ளது. அவற்றை நாம் கண்டறிந்து, உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஓய்வையும் அளிக்க வேண்டும்.

குறிப்பாக ஏழு வகையான ஓய்வுகள் உள்ளனவாம். ஒன்று, உடலுக்கான ஓய்வு.

இது வெறும் ஓய்வுதான். உடலுக்கு அளிக்கப்படும் ஓய்வு அதன் புத்துணர்ச்சியை இழந்த சக்தியை மீண்யும் பெற உதவலாம். இதற்காக நாம் தியானம் செய்யலாம். மூச்சுப் பயிற்சி அளிக்கலாம். மசாஜ் செய்யலாம். உடற்பயிற்சி மற்றும் நடனப் பயிற்சிகள் கூட இந்த வகையில் அடங்கும். வெறுமனே படுத்துக்கொண்டு செல்போனை பார்த்துக்கொண்டிருந்தால் அது ஓய்வாகாது.

மனதுக்கும் ஓய்வு

அதாவது, உலகில் ஒவ்வொரு 970 பேரிலும் 8 பேருக்கு மனநிலை பிரச்னை உள்ளதாம். இந்தியாவை எடுத்துக்கொண்டால் இந்த எண்ணிக்கை சற்று அதிகமாம். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் லட்சக்கணக்கானோர் மனநோயால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, மனதுக்கும் ஓய்வு தேவை.

எப்போதும் ஏதாவது ஒரு வேலையை செய்துகொண்டே இருப்பது, எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருப்பது போன்றவற்றிலிருந்து சிறிது ஓய்வு கொடுக்க வேண்டும். மௌன விரதம் இருக்கலாம். எதையும் பேசும்போதுதானே சிந்தித்துப் பேச வேண்டும். பேசாமல் இருப்பது மன அமைதிக்குச் சிறந்தது.

யாருடனாவது பேசித்தான் ஆக வேண்டும் என்றில்லாமல் இசையைக் கேட்டு ரசிக்கலாம். கேட்பதோடு, அதில் மெய்மறக்க வேண்டும்.

உங்களுக்குப்பிடித்தமான வேலைகளை செய்யலாம், அதுவும் மனதுக்கு பிடித்தமான வேலைகளை.

சமூகத்திலிருந்து ஓய்வு..

முன்பெல்லாம் முக்கிய பிரபலங்களுக்குத்தான் இது பொருந்தும். சமூக வலைத்தளங்கள் வந்துவிட்டதால் அனைவருக்குமானதாகிவிட்டது. அதாவது, ஒரு சில நாள்கள் அல்லது சில மணி நேரங்கள் தனித்து இருப்பது. இயற்கையான இல்லையென்றால் அமைதியான சாலைகளில் நடப்பது யாருமற்ற இடங்களில் அமைதியாக அமர்ந்திருப்பது போன்றவையும் நல்லதே.

ஆன்மீக ரீதியான ஓய்வு

சிலருக்கு தெய்வ பக்தி அதிகமிருக்கும். அவ்வாறானவர்கள் கோயில்களுக்குச் சென்று தியானத்தில் அமர்வது, ஒரு நாள் முழுக்க பிடித்தமான கோயிலில் அமர்ந்திருப்பது, பூஜையில் பங்கேற்பது, கோயிலுக்கு வழிபாடுக்கு செல்வது போன்றவற்றை செய்யும்போது நிச்சயம் மனதுக்கு எனர்ஜி கிடைக்கும்.

இதுதான் மிக முக்கியம். உணர்வுப்பூர்மான ஓய்வு

உங்கள் நலத்தையும் மற்றவர் நலத்தையும் நினைத்துக் கவலைப்படுவதிலிருந்து ஓய்வு.

முடியாது, தெரியாது, இல்லை, வேண்டாம் போன்ற வார்த்தைகளை சொல்லப் பழகுவது, மற்றவர்களின் பிரச்னையை தலைமேல் போட்டுக்கொண்டு யோசிப்பது, பேசுவது, கோபம் உள்ளிட்ட உணர்வுகளை இரண்டு மடங்களாக வெளிப்படுத்தவது, அதன்பிறகு வருந்துவது போன்ற அனைத்திலிருந்தும் விடுபடுவது,

மனதை லேசாக வைத்துக் கொள்ளுங்கள். எது நடந்தாலும் அதை உங்கள் ஒருவரால் மாற்றிவிட முடியும் என்று நினைக்காமல் எதையும் ஏற்றுக்கொள்ள முயலலாம். கோபம் வரும்படி யாரும் பேசினால் அவ்விடத்தை கடந்து செல்லலாம். மௌனம் காக்கலாம். ஒருவர் மீது கோபம் வரும்போது அவர் மீது கோபப்படுவதற்கு பதில் அவரது முக்கியத்துவத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.

உங்களை நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ளலாம். இது நிச்சயம் மனதுக்கு இதமளிக்கும். நன்மை பயக்கும்.

எப்போதாவது மிகவும் களைப்பாக உணர்ந்தால், இந்த ஓய்வுகளை ஒன்றன் பின் ஒன்றாக முயற்சித்துப் பார்க்கலாம். எனவே உறக்கம் மட்டுமே ஓய்வல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

SCROLL FOR NEXT