ஸ்பெஷல்

தரமற்ற காய்கறி, பழங்களில் இருந்து எஸ்கேப் ஆவது எப்படி?

கார்த்திகா வாசுதேவன்

கடைக்குப் போய் காய்கறி மற்றும் பழங்கள் வாங்குவது முதல் அதை சமைத்து சாப்பிடுவது வரை சிலருக்கு ஆயிரம் சந்தேகங்கள். பலர் எதையும் கண்டு கொள்வதே இல்லை. போனோமா... வாங்கினோமா? சமைத்தோமா? மிச்சமானால் ஃப்ரிஜ்ஜில் எடுத்துப் போட்டோமா? தீரும் வரை சுட வைத்து சுட வைத்து சாப்பிடுவோமா? என்றிருக்கிறார்கள். இதில் வயது வித்யாசமே இல்லை. சமையலில் தேர்ந்தவர்கள், ஆரோக்யத்தில் அக்கறை கொண்டவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள். பிறகு யாரெல்லாம் அப்படிச் செய்கிறார்கள் என்றால்? சமைப்பதையும், சாப்பிடுவதையும் வெறும் ஒரு கடமையாகவும், நிர்பந்தமாகவும் நினைக்கிறவர்கள் மட்டுமே அப்படிச் செய்கிறார்கள். அது தவறு. இப்படியான மனோபாவம் இருப்பதால் தான் விருந்தென்று நினைத்துக் கொண்டு நாம் பெரும்பாலும் விஷத்தைச் சாப்பிட வேண்டியதாகி விடுகிறது. சமைத்த உணவுகளை அன்றைன்றைக்கே சாப்பிட்டு முடித்து விடுவது தான் உடல்நலனுக்கு நல்லது. சில உணவுப் பொருட்களை மறுநாள் வரை வைத்திருக்கலாம். ஆனால் வாரக் கணக்கில் வைத்துச் சாப்பிடுவது ஒன்று வற்றல், வடாம்களாக இருக்க வேண்டும் அல்லது ஊறுகாயாக மட்டுமே இருக்க வேண்டும். அசைவம் சாப்பிடக் கூடியவர்கள் என்றால் உப்புக்கண்டத்தையும், கருவாட்டையும் தவிர்த்து வேறு எதையுமே தயவு செய்து ஃப்ரிஜ்ஜில் சேமித்து வைத்து வாரக் கணக்கில் பயன்படுத்தாதீர்கள். உங்களுக்கு வரக்கூடிய பலவிதமான உடல்நலக் கேடுகளுக்கு அது தான் முக்கியமான காரணமாகி விடுகிறது என்பதை நினைவில் வையுங்கள்.

இந்தக் காணொலியில் காய்கறி, பழங்களை எப்படித் தரம் பார்த்து வாங்குவது? அவற்றை எத்தனை நாட்களுக்குள் உண்டு முடிக்க வேண்டும், காய்கறி மற்றும் பழங்களின் மேற்புறத்தில் படியும் ரசாயனக் கலப்பை எப்படி நீக்குவது என்பன போன்ற தகவல்களைப் பற்றி அலசியுள்ளோம்.

இது தினமணியின் டீ பிரேக் நேரம்.

இதில் பல விஷயங்களைப் பற்றி அலசி வருகிறோம்.

இதற்கு முன் இரண்டு டீ பிரேக் தொடர்கள் முடிந்துள்ளன.

இது டீ பிரேக் - 3

இதில் இன்றைய நாகரீக யுகத்தின் மிக முக்கியமான பிரச்னையான காய்கறிகள் மற்றும் பழங்களின் தரத்தைக் கணித்து ஆரோக்யமான வாழ்க்கை வாழ்வதற்கான குறிப்புகளை வழங்கியிருக்கிறோம்.

வாசகர்கள், மறவாமல் அனைத்து டீ பிரேக் தொடர்களையும் கண்டு உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அத்துடன் தினமணி யூ டியூப் சேனலையும் சப்ஸ்கிரைப் செய்ய மறவாதீர்கள்.

நன்றி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT