ஸ்பெஷல்

சூப்பர் மாம் / சூப்பர் டாட் ஆக என்ன செய்யனும்?

பார்த்து விட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்களது அரட்டையில் விடுபட்டுப் போனதாக நீங்கள் நினைக்கும் கருத்துக்களையும் கமெண்ட் பகுதி வாயிலாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கார்த்திகா வாசுதேவன்

இன்றைக்கு பெரும்பாலான குடும்பங்களில் ஒற்றைக் குழந்தைகள் தான். அரிதாக இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களை நல்ல குடிமக்களாக வளரச் செய்ய பெற்றோர்களான நமது மெனக்கெடல்கள் முந்தைய தலைமுறையினரைக் காட்டிலும் இப்போது அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். இதில் கஷ்டம் என்னவென்றால், நாம் சிரமப்பட்டு நம் குழந்தைகளை வளர்த்தெடுக்கிறோம் பேர்வழியென்று பெரும்பாலும் குழந்தைகளைக் கொஞ்சிக் கொஞ்சியோ அல்லது கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தோ வளர்த்து குட்டிச் சுவராக்கி விடுகிறோம். பிறகு கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் கதையாக எல்லாம் முடிந்த இறுதிக் கட்டத்தில் நின்று கொண்டு அதுவரையிலான எல்லாத் தவறுகளுக்குமே குழந்தைகளை மட்டுமே குற்றவாளிகளாக நிறுத்திக் குறை கூறிக் கொண்டிருக்கிறோம். இது தவறு. இப்படியெல்லாம் இருந்தால் உங்களால் நிச்சயம் நீங்கள் உங்கள் ஆழ்மனதில் புதைத்து வைத்திருக்கும் ஆசைகளில் ஒன்றான சூப்பர் மாம் / சூப்பர் டாட் இலக்குகளை எப்போதும் எட்டவே முடியாது. அப்படியானால் நாம் செய்ய வேண்டியது தான் என்ன? அதைத்தான் இந்த விடியோவில் பேசி இருக்கிறோம்.

பாருங்கள், பார்த்து விட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்களது அரட்டையில் விடுபட்டுப் போனதாக நீங்கள் நினைக்கும் கருத்துக்களையும் கமெண்ட் பகுதி வாயிலாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மீண்டுமொரு டீ பிரேக் விடியோவில் சந்திக்கலாம்.

முந்தைய டீ பிரேக் வீடியோக்களைக் காண...

டீ பிரேக் -1 (https://www.youtube.com/watch?v=xWuZZ...)

டீ பிரேக் -2 (https://www.youtube.com/watch?v=lOyAx...)

டீ பிரேக் -3 (https://www.youtube.com/watch?v=Gfa8D...)

நன்றி.

கருத்தாக்கம்: கார்த்திகா வாசுதேவன், உமா ஷக்தி
படத்தொகுப்பு: ராகேஷ் குமார்
ஒளிப்பதிவு: ஹேம்நாத் லட்சுமணன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

பஞ்சாப் வெள்ளம்: மீட்புப் பணியில் முதல்வரின் ஹெலிகாப்டர்!

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

SCROLL FOR NEXT