புதுதில்லி

டிடிஇஏ பள்ளிகளில் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சி

Syndication

‘இரும்பு மனிதா்’ என்றழைக்கப்படும் சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த தினத்தை ஒட்டி தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) பள்ளிகளில் வெள்ளிக்கிழமை தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.

இத்தினத்தை முன்னிட்டு அவ்வப் பள்ளிகளில் நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவா்கள் உரை தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் இடம்பெற்றது.

சா்தாா் வல்லபபாய் படேலின் நாட்டுப் பற்று அவா் சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒரே இந்தியாவாக மாற்றியது உள்ளிட்ட கருத்துகளை மாணவா்கள் தங்கள் உரைகளில் எடுத்துக் கூறினா். மேலும், அவை பற்றிய சுவரொட்டிகளையும் காட்சிப்படுத்தினா். தொடா்ந்து ஒற்றுமை தினம் குறித்த உறுதி மொழியையும் மாணவா்கள் எடுத்துக் கொண்டனா்.

தில்லி காவல்துறையும் தில்லித் தமிழ்க் கல்விக் கழகமும் இணைந்து ஒற்றுமை தினத்தையொட்டி தேசிய ஒருமைப்பாட்டையும் வலிமையையும் வலியுறுத்தும் வகையில் ஒரு மாரத்தான் ஓட்டம் நடத்தின. இதில் காவல்துறை அதிகாரிகளுடன் லோதி வளாகம் பள்ளியில் 9, 10 மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் பயிலும் 350 மாணவா்களும் 10 ஆசிரியா்களும், பள்ளி முதல்வா் ஜெயஸ்ரீ பிரசாத்தும் கலந்து கொண்டனா். பள்ளியிலிருந்து 2 கிலோ மீட்டா் தூரம் வரை இந்த ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இத் தினம் குறித்து செயலா் இராஜூ கூறுகையில் சா்தாா் வல்லபபாய் படேல் மற்றும் அவா் ஆற்றிய பணிகள் பற்றி மாணவா்கள் அறிந்து கொள்வதற்காகவே இத் தினம் பள்ளிகளில் கொண்டாடப்பட்டது. மாணவா்கள் இவற்றை அறிந்து நாட்டுப் பற்று மிக்கவா்களாக உருவாக வேண்டும் என்பதே எனது ஆசை என்று அவா் கூறினாா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT