கோப்புப் படம் 
விளையாட்டு

37 வயதிலும் நன்றாக விளையாடும் டு ப்ளெஸ்சி!

37 வயதிலும் நன்றாக விளையாடும் டு ப்ளெஸ்சியை டி20 உலக கோப்பை தென்னாப்பிரிக்கா அணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என மோர்னி மோர்கல் கருத்துத் தெரிவித்துள்ளார். 

DIN

37 வயதிலும் நன்றாக விளையாடும் டு ப்ளெஸ்சியை டி20 உலக கோப்பை தென்னாப்பிரிக்கா அணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என மோர்னி மோர்கல் கருத்துத் தெரிவித்துள்ளார். 

டு பிளெஸ்சி 2020 முதல் தென்னாப்பிரிக்கா அணியில் டி20 போட்டிகளில் விளையாடாமல் இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிக்காக அட்டகாசமாக விளையாடிள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாப் டு பிளெஸ்சியை வரும் டி20 உலக கோப்பை அணியில் தேர்ந்தெடுக்க வேண்டுமென முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்கல் கூறியுள்ளார். டூ ப்ளெஸ்சிப் பற்றி மோர்னி மோர்கல் கூறியதாவது: 

டி20 உலக கோப்பை தென்னாப்பிரிக்கா அணிக்கு அனுபவம் வாய்ந்த பெரிய வீரர் யாராவது தேவைப்படுகிறார்கள். டு பிளெஸ்சி 37 வயதிலும் நன்றாக விளையாடுகிறார். பீல்டிங்கிலும் நன்றாகவே இருக்கிறார். அவர் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக அருமையாக விளையாடுவதை பார்க்கிறோம். இப்போதைய தென்னாப்பிரிக்க அணி சம பலத்துடன் இருக்கிறது. ககிசோ ரபாடா, ஆண்ட்ரிக் நோர்கியா ஆஸ்திரேலியாவில் அருமையாக பந்து வீசுவார்கள். சுழல் பந்தில் ஷம்ஸி இருக்கிறார். இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு நான் ஒரு பெரிய ரசிகன். ஃபாப் டு பிளெஸ்சியை வரும் டி20 உலக கோப்பை அணியில் தேர்ந்தெடுக்க வேண்டுமென தேர்வுக்குழுவைக் கேட்டுக்கொள்கிறேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

தடக் 2: அமோக வரவேற்பில் ஹிந்தி பரியேறும் பெருமாள்!

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

SCROLL FOR NEXT