கோப்புப் படம் 
விளையாட்டு

எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப் போகிறேன் : ஆரோன் பின்ச்

ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஆரோன் பின்ச் ஓய்வை பெறுவது குறித்து கேள்வி கேட்டபோது எல்லாவற்றுக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப் போவதாக  கூறினார். 

DIN

ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஆரோன் பின்ச் ஓய்வு பெறுவது குறித்து கேள்வி கேட்டபோது எல்லாவற்றுக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப் போவதாக  கூறினார். 

35 வயதான ஆஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் ஆரோன் பின்ச் ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஓய்வை அறிவித்தார். 

கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை ஆரோன் பின்ச் தலைமையில் ஆஸ்திரேலியா வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போதைய உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கிறது. இந்த உலக கோப்பையுடன் ஆரோன் பின்ச் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டி20 உலக கோப்பைக்கு இன்னும் 100 நாள்கள் இருப்பதை கொண்டாடிய விழாவில் ஆரோன் பின்ச் பேசியதாவது: 

திட்டமிட்டபடி நடந்தால் விரைவில் ஓய்வு குறித்த எல்லாவற்றுக்கும் முற்றுப்பள்ளி வைக்க இருக்கிறேன். விளையாட்டில் மாயாஜாலம் நடைப்பெறுவதுண்டு. இயற்கையாகவே, ஒரு மனிதனுக்கு 30க்குப் பிறகு இப்படி நடக்கும். டேவிட் வார்னரின் பிட்னஸ் நன்றாக இருக்கிறது. அவரால் இன்னும் 10 வருடம்கூட விளையாட முடியும். 

இந்த உலக கோப்பை மிகுந்த போட்டியுள்ளதாக இருக்கப் போகிறது. கடந்த முறை தென்னாப்பிரிக்க அணி 5இல் 4 போட்டிகள் வென்றும் ரன் ரேட் அடிப்படையில் தேர்வாகாமல் வெளியேறியதைப் பார்த்தோம். அந்த அளவுக்கு கடுமையான போட்டியில் நிச்சயமாக அதிர்ஷ்டம் சிறிதளவு தேவை. பார்ப்போம் இம்முறை என்ன நடக்கிறதென. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT