விளையாட்டு

டி20யில் அதிக பவுண்டரிகள்: ரோகித் சர்மா சாதனை

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் 300 பவுண்டரிகள் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 

DIN

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் 300 பவுண்டரிகள்  அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டி20 போட்டியில் ரோகித் சர்மா 20 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உடன் 31 ரன்களை எடுத்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 301 பவுண்டரிகளை எடுத்துள்ளார். 

விராட் கோலி 298 பவுண்டரிகளை அடித்துள்ளார். ரோகித் சர்மா விராட் கோலியின் சாதனையை முறியடித்து இந்தியாவில் அதிகமான பவுண்டரிகள் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார். 

இந்த பட்டியலில் சர்வதேச அளவில் 325 பவுண்டரிகளுடன் அயர்லாந்து வீரர் பால் ஸ்டிரிலிங் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலும் கடல் காற்றும்... அனிதா சம்பத்!

இன்று முக்கிய அறிவிப்பு? முதல்வர் ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு!

வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்!

ரஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

SCROLL FOR NEXT