கோப்புப் படம் 
விளையாட்டு

டி20: 31 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி 

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 

DIN

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 

அயர்லாந்துக்கு நியூசிலாந்து அணி சென்று முதல் 3 ஒருநாள் போட்டியில் 3-0 என நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றது. அடுத்து 3 டி20 தொடரில் விளையாட மிட்செல் சாண்ட்னர் தலைமையில் களமிறங்கியது. இதில் முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 173 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 69 ரன்களை எடுத்தார். ஜிம்மி நீஷம் 29, மார்டின் கப்டில் 24 ரன்களும் எடுத்தனர். 

அடுத்து பேட்டிங் செய்த அயர்லாந்து அணி மோசமாக விளையாடி 18.2 ஓவர்களிலே மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களை எடுத்தது. காம்ஃபர் 29, மார்க அடையர் 25 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணி சார்பில் பெர்குசன் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். 31 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டி20 போட்டியை வெற்றியுடன் தொடங்கியுளது நியூசிலாந்து அணி. 

கிளென் பிலிப்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலர் கைது

சிரிக்கும் தும்பைப் பூ... கேப்ரியல்லா!

இது புதுசு! உணவு ஆர்டர் செய்யும் செயலிகளிலும் மோசடியா? எச்சரிக்கை!

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

SCROLL FOR NEXT