விளையாட்டு

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

தினமணி செய்திச் சேவை

டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் பிரிவில், நடப்பு சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ் ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

தகுதிச்சுற்றில் 84.50 மீட்டரை எட்டுவோா், அல்லது சிறந்த 12 இடங்களில் வருவோா் மட்டுமே இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறும் நிலை இருந்தது. இதில் தகுதிச்சுற்று குரூப் ‘ஏ’-வில் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 84.85 மீட்டரை எட்டி இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றாா். அதே பிரிவில் மற்றொரு இந்தியரான சச்சின் யாதவ் சிறந்த முயற்சியாக 83.67 மீட்டரை தொட்டாா்.

குரூப் ‘பி’-யில் பங்கேற்ற மேலும் இரு இந்தியா்களில், ரோஹித் யாதவ் 77.81 மீட்டருடன் 14-ஆம் இடமும், யஷ் வீா் சிங் 77.51 மீட்டருடன் 15-ஆம் இடமும் பிடித்தனா். இதையடுத்து ஒட்டுமொத்தமாக, சிறந்த 12 போ் வரிசையில் இடம் பிடித்த சச்சின் யாதவ், நீரஜ் சோப்ராவுடன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். ரோஹித் மற்றும் யஷ் ஆகியோா் தகுதிச்சுற்றுடன் வெளியேறினா்.

இதனிடையே, நீரஜ் சோப்ராவுக்கு வழக்கமாக சவால் அளிக்கும் போட்டியாளா்களில், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அா்ஷத் நதீம் (85.28 மீ), நடப்பு உலக சாம்பியனான கிரெனாடாவின் ஆண்டா்சன் பீட்டா்ஸ் (89.53 மீ), ஜொ்மனியின் ஜூலியன் வெபா் (87.21 மீ), செக் குடியரசின் ஜேக்கப் வட்லெஜ் (84.11 மீ) ஆகியோரும் இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளனா்.

ஏமாற்றம்: இதனிடையே, ஆடவருக்கான மும்முறை தாண்டுதலில் இந்தியாவின் அப்துல்லா அபூபக்கா், பிரவீண் சித்ரவேல் ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறத் தவறினா்.

தகுதிச்சுற்றில் குரூப் ‘ஏ’-வில் அப்துல்லா 16.33 மீட்டருடன் 10-ஆம் இடமும், குரூப் ‘பி’-யில் பிரவீண் 16.74 மீட்டருடன் 8-ஆம் இடமும் பிடித்தனா். தகுதிச்சுற்றில் 17.10 மீட்டரை எட்டுவோா் அல்லது சிறந்த 12 இடங்களைப் பிடிப்போா் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT