படம் | ஐசிசி
கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் வரலாற்று வெற்றி!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, துணைக் கேப்டன் சௌத் ஷகீல் 141 ரன்கள் எடுத்தார்.

வங்கதேசம் தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஹாசன் மஹ்முத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மெஹிதி ஹாசன் மிராஸ் மற்றும் ஷகிப் அல் ஹசன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேசம் அபாரமாக விளையாடி 565 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் முஸ்பிகூர் ரஹீம் அதிகபட்சமாக 191 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஷாத்மன் இஸ்லாம் 93 ரன்களும், மெஹிதி ஹாசன் மிராஸ் 77 ரன்களும் குவித்தனர். வங்கதேசம் பாகிஸ்தானைக் காட்டிலும் 117 ரன்கள் முன்னிலை பெற்றது.

பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷாகின் ஷா அஃப்ரிடி, குர்ரம் ஷாஷத் மற்றும் முகமது அலி தலா 2 விக்கெட்டுகளையும், சைம் அயூப் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 51 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அப்துல்லா ஷஃபீக் 37 ரன்கள் எடுத்தார்.

வங்கதேசம் தரப்பில் மெஹிதி ஹாசன் மிராஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும், சோரிஃபுல் அஸ்லாம், ஹாசன் மஹ்முத் மற்றும் நஹித் ராணா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் அணி 146 ரன்களில் ஆட்டமிழக்க, வங்கதேசத்துக்கு 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 30 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய வங்கதேசம் 6.3 ஓவர்களில் இலக்கை எட்டி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ள முதல் அணி வங்கதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாழ்க்கை வரலாற்று இலக்கியம்

வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வந்ததால் இளைஞர்கள் பற்றி மோடிக்கு கவலையில்லை! ராகுல்

முத்தையா இயக்கிய சுள்ளான் சேது டீசர் தேதி!

தொரசாமி

தமிழா... நீ முன்னோடி!

SCROLL FOR NEXT