படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

DIN

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் விளையாடி முடித்துவிட்ட நிலையில், இலங்கை அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது.

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 113 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, தினேஷ் சண்டிமால் 79 ரன்களும், ஏஞ்ஜலோ மேத்யூஸ் 65 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் மேத்யூ பாட்ஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளையும், மார்க் வுட் மற்றும் ஜோ ரூட் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இலங்கை அணி 204 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இங்கிலாந்துக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இங்கிலாந்து அணியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட் அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, ஜேமி ஸ்மித் 39 ரன்களும், டேனியல் லாரன்ஸ் 34 ரன்களும் எடுத்தனர்.

முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதால் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஜேமி ஸ்மித் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு: பயணிகள் அவதி!

தமிழக காவலர்கள் மீது கல்வீச்சு: வடமாநில தொழிலாளர்களுக்கு சிறை!

மேட்டூர் அணை நீர்மட்டம் 2-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

புதிய பதவி காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

செப்.12, 19-இல் தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்பு கூட்டம்

SCROLL FOR NEXT