அஸ்வின் மற்றும் அவரது தந்தை ரவிச்சந்திரன் 
கிரிக்கெட்

தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கவில்லை: அஸ்வின் தந்தை குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அஸ்வினின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

DIN

இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்துவிதமான சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக நேற்று(டிச.18) அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று சென்னை வந்த அஸ்வினுக்கு சென்னை விமான நிலையம் மற்றும் அவரது இல்லத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அஸ்வின், தனது ஓய்வு முடிவும் குறித்தும், இனி வருங்காலங்களில் கிளப் அணிகளில் விளையாடுவது குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

அணித்தேர்வு குறித்து மறக்க நினைக்கிறேன்: ஆஸி. இளம் வீரர்!

அஸ்வின் திடீரென ஓய்வு அறிவித்த நிலையில், அவரது பெற்றோர் அவரை கண்ணீருடன் வரவேற்றனர்.

இதுகுறித்து அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரன் கூறுகையில், “இந்திய அணியில் அஸ்வினுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவருக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு அவர் அவமானப்படுத்தப்பட்டார்.

அஸ்வின் ஓய்வு அறிவிக்கப்போவது எனக்கும் கடைசி நிமிடத்தில் தான் தெரியவந்தது. அவர் மனதில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும், நான் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

இந்தியாவுக்கான போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது: ஐசிசி!

14-15 ஆண்டுகளாக விளையாடிவரும் நிலையில் திடீரென ஓய்வு அறிவிக்கப்பட்டது இன்னும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அவருக்கான வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. அதையும் அவர் எவ்வளவு காலம்தான் பொறுத்துக்கொண்டு இருப்பார்” என்றார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடரில் அடிலெய்டில் நடைபெற்ற பிங்க் பந்து டெஸ்ட்டில் மட்டும் முதல் டெஸ்ட்டில் விளையாடிய வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக விளையாடினார். இருப்பினும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்குப் பதிலாக ஜடேஜா களமிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2 ஆண்டுகளில் 4 போட்டிகள் மட்டுமே... விரக்தியாக இருக்கிறது! ஹேசில்வுட் பேட்டி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் ஓரணியில் திரள வேண்டும்: ஜி.கே. வாசன்

மின்னலொளி பெண்ணழகே... கிகி விஜய்!

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

என்றும் இயல்பாக... பார்வதி!

3-வது அதிவேக சதம் விளாசிய ஹாரி ப்ரூக்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

SCROLL FOR NEXT