ரோஹித் சர்மா  படம் | பிசிசிஐ (எக்ஸ்)
கிரிக்கெட்

ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் சிறிது காலம் விளையாடுவேன்: ரோஹித் சர்மா

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சில காலத்துக்கு விளையாடுவேன் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

DIN

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சில காலத்துக்கு விளையாடுவேன் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அண்மையில் டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. உலகக் கோப்பையை வென்ற பிறகு அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா மூவரும் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

இதனையடுத்து, ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற மூத்த வீரர்கள் அணியில் இல்லாத நிலையிலும், இந்திய அணி டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இம்மாத இறுதியில் இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரிலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம்பெற மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சில காலத்துக்கு விளையாடுவேன் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் ஏற்கனவே கூறிவிட்டேன். நான் எதிர்காலம் குறித்து அதிகம் யோசிக்கவில்லை. இன்னும் சில காலத்துக்கு நான் விளையாடுவதை நீங்கள் பார்க்கலாம் என்றார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களுக்கு இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக வழிநடத்துவார் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, இம்மாத தொடக்கத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 822.70 கோடியில் அமையவுள்ள பிராட்வே பேருந்து நிலையத்தின் சிறப்பம்சங்கள்!

முதல் டி20: டிராவிஸ் ஹெட் கேப்டன்; மூன்று அறிமுக வீரர்களை களமிறக்கும் ஆஸி.!

மக்களிடம் கருத்து கேட்க தவெக தேர்தல் அறிக்கைக் குழு சுற்றுப்பயணம்!

உ.பி.யில் பிப்.9 முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: பிப்.11ல் பட்ஜெட் தாக்கல்!

ஓபிஎஸ்ஸை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை: இபிஎஸ்

SCROLL FOR NEXT