படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

இந்தியாவுக்கு ஹாட்ரிக் வெற்றி; அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, பாகிஸ்தான்!

நேபாளத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

DIN

நேபாளத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (ஜூலை 23) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷஃபாலி வர்மா மற்றும் தயாளன் ஹேமலதா களமிறங்கினர். இன்ந்த இணை அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 122 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டினை இழந்தது. தயாளன் ஹேமலதா 42 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வர்மா அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 48 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன்பின் களமிறங்கிய சஜனா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதிக் கட்டத்தில் அதிரடி காட்டிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. நேபாளம் தரப்பில் சீதா ராணா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கபிதா ஜோஷி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாளம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. நேபாள அணியில் அதிகபட்சமாக சீதா ராணா மகர் 18 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, பிந்து ராவல் அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அருந்ததி ரெட்டி மற்றும் ராதா யாதவ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும், ரேனுகா சிங் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு தொடர்ச்சியாக கிடைக்கும் 3-வது வெற்றியாகும். குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதெல்லாம் சின்ன விஷயங்கள்... திவ்யா உர்துகா!

பூமியில் நாளொன்றுக்கு 5 செயற்கைக் கோள்கள் விழும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

மேகம், மலை, நீர், நிலம்... ஷாமா சிக்கந்தர்!

மக்களுக்குப் பிடித்த சின்ன திரை நடிகை! விருது வென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி!

அஞ்சான் மறுவெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT