3-வது ஒருநாள்: ஆப்கனுக்கு 245 ரன்கள் இலக்கு; தொடரை கைப்பற்றுமா?
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் இன்று (நவம்பர் 11) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
இதையும் படிக்க: இந்திய அணியை பும்ரா கேப்டனாக வழிநடத்துவார்; பத்திரிகையாளர் சந்திப்பில் கௌதம் கம்பீர்!
வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக மஹ்மதுல்லா 98 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். 2 ரன்களில் அவர் சதமடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டார். அவருக்கு அடுத்தபடியாக கேப்டன் மெஹிதி ஹாசன் மிராஸ் அதிகபட்சமாக 66 ரன்கள் எடுத்தார்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் அஸ்மதுல்லா ஓமர்சாய் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது நபி மற்றும் ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: கேப்டன் பொறுப்பு பும்ராவுக்கு கடினமாக இருக்கும்: ரிக்கி பாண்டிங்
245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் இருப்பதால், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.