27 ஆண்டுகளுக்குப் பிறகு இரானி கோப்பையை வென்ற மும்பை.  படம்: எக்ஸ் / பிசிசிஐ டொமஸ்டிக்
கிரிக்கெட்

27 ஆண்டுகளுக்குப் பிறகு இரானி கோப்பையை வென்ற மும்பை!

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றுள்ளது.

DIN

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றுள்ளது.

ரஹானே தலைமையிலான மும்பை அணியும் ருதுராஜ் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியும் மோதின. 5 நாள்கள் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 416 ரன்கள் எடுத்தது. மும்பை அணி 537 ரன்கள் எடுத்தது.

அதைத் தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸில் மும்பை அணி 329/8 ரன்கள் எடுத்திருந்த வேளையில் 5 நாள்களும் முடிவடைந்தது. இதனால் ஆட்டம் டிராவாக முடிந்தது.

ஆனால் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி அதிகமான ரன்களை எடுத்திருந்ததால் மும்பை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கடைசி இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி தனுஷ் கோடியான் சதமடித்தார்.

இது மும்பையின் 15ஆவது கோப்பையாகும். 27ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கோப்பையை வெல்வதும் குறிப்பிடத்தக்கது.

கடைசியாக 1997-1998 சீசனில் வென்றது. அதன்பின் 8 முறை இறுதிப் போட்டி வந்தும் தோல்வியடைந்தது. கடைசியாக 2015- 16 சீசனில் இறுதிப் போட்டி வந்திருந்தது.

இரட்டைச் சதம் விளாசிய சர்ஃபராஸ் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT