சென்னை டெஸ்ட்: 149 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்! பும்ரா அசத்தல்
சென்னையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சென்னையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
இந்தியா வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் 113, ஜடேஜா 86 ரன்கள் குவித்தனர். வங்கதேசத்தின் மெஹிதி ஹாசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜெய்ஸ்வால், கில்லுக்கு எதிராக திட்டங்களை வகுப்பதே எங்களது நோக்கம்: ஆஸி. வேகப் பந்துவீச்சாளர்
அதன் பின்னர் தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு இந்திய பௌலர்கள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்ததால் வங்கதேச வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
வங்கதேச அணித் தரப்பில் ஷஹிப் அல் ஹசன் 32 ரன்களும், மெஹிதி ஹாசன் 27 ரன்களும், விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் 22 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணித் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், ஜடேஜா, ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 227 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்திய அணி தற்போது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.