படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

கௌதம் கம்பீர் - விராட் கோலி நேர்காணலை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம்: மனோஜ் திவாரி

கௌதம் கம்பீர் - விராட் கோலி இருவரும் ஒன்றாக இணைந்து நேர்காணலில் பங்கேற்பார்கள் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.

DIN

கௌதம் கம்பீர் - விராட் கோலி இருவரும் ஒன்றாக இணைந்து நேர்காணலில் பங்கேற்பார்கள் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் பங்குபெற்ற நேர்காணல் ஒன்றை பிசிசிஐ அண்மையில் வெளியிட்டது. இதனையடுத்து, மனோஜ் திவாரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மோதல் போக்கும், முடிவும்

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக, ஐபிஎல் தொடரின்போது கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலிக்கு இடையே சில முறை மைதானங்களில் வாக்குவாதங்கள் நடைபெற்றன.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட உள்ளார் என்ற செய்தி தெரிந்ததுமே, கம்பீர் மற்றும் கோலி இடையிலான புரிதல் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக் கொண்டது எனலாம். பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு, இருவரும் பயிற்சிகளின்போது மகிழ்ச்சியாக பேசும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்தது.

யாரும் எதிர்பார்க்காதது

பிசிசிஐ நேர்காணலில் கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி ஒன்றாக இணைந்து பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து, கௌதம் கம்பீர் - விராட் கோலி இருவரும் ஒன்றாக இணைந்து நேர்காணலில் பங்கேற்பார்கள் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம் என மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

மனோஜ் திவாரி (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை தற்போது கூறுவது கடினம். அவர் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. தற்போது வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஒரு தொடரிலேயே ஒருவர் எப்படி செயல்படுகிறார் எனக் கூறுவது கடினம். கௌதம் கம்பீர் போராட்ட குணம் உடையவர்.

அரசியலில் இருந்து வெளியேறி, இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள அவரது புதிய முகத்தை பார்த்து வருகிறோம். அவர் எம்.எஸ்.தோனி மற்றும் விராட் கோலியுடன் நட்புறவு பாராட்டி வருகிறார். விராட் கோலியும், கௌதம் கம்பீரும் பங்கேற்ற நேர்காணலை பார்த்தோம். அது உண்மையில் சிறப்பானது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, விராட் கோலியுடன் கௌதம் கம்பீருக்கு பிரச்னை இருந்தது. ஆனால், பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, மோதல் போக்கு மறைந்து நட்பு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையில் நல்ல பிணைப்பு இருக்கிறது. அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நேர்காணலில் பங்கேற்கிறார்கள். இதுபோன்ற ஒரு விஷயம் நடக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். இதுதான் மாற்றம் என்பது. இந்த மாற்றம் அவசியமானதும்கூட என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாய நிலத்திற்குள் நுழைந்த யானை! பாதுகாப்பாக காட்டிற்குள் விரட்டிய வனத்துறையினர்!

அமெரிக்க பொண்ணு - இந்திய பையன்! காதலா, நிச்சயித்த திருமணமா? வைரலான விடியோ

பெரியவர் தோழர் தமிழரசன்

ஆவணி மாதப் பலன்கள் - துலாம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!

SCROLL FOR NEXT