படம் | AP
கிரிக்கெட்

இந்தியா - வங்கதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

DIN

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

மழைக்கு வாய்ப்பு

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் நாளை (செப்டம்பர் 27) தொடங்கவுள்ள நிலையில், இந்த போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

கான்பூரில் நாளை நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியை பொருத்தவரையில், ஆடுகளம் மற்றும் வானிலை ஆகிய இரண்டும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆடுகளம் பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் என இருவருக்கும் சாதகமானதாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

முதலில் வேகப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடும். பின்னர், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஆடுகளம் மாறும் எனக் கூறப்படுகிறது. ஆட்டத்தின் 4 மற்றும் 5 ஆம் நாள்களில் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றதாக மாறக் கூடும் எனக் கூறப்படுகிறது. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு இரண்டு அணிகளும் தங்களது பிளேயிங் லெவனை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

போட்டியின் முதல் மூன்று நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆடுகளத்தின் தன்மை மாறலாம் எனவும் கூறப்படுகிறது. மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுவதால், டாஸ் வெல்வதிலிருந்து பிளேயிங் லெவனை தேர்வு செய்வது வரை அணியின் அனைத்து முடிவுகளும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

குழப்பத்தில் அணிகள்

கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் இன்று மதியம் இரண்டு ஆடுகளங்களை சீரமைக்கும் பணிகளில் ஆட்கள் ஈடுபட்டதால், அந்த இரண்டு ஆடுகளங்களில் எந்த ஆடுகளம் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் எனத் தெளிவாக தெரியவில்லை. எந்த ஆடுகளம் போட்டிக்கு பயன்படுத்தப்படும் எனத் தெரியாமல் அணிகள் குழப்பத்தில் உள்ளன. ஆடுகளத்தைப் பொருத்தே பிளேயிங் லெவன் தேர்வு செய்யப்படும் எனத் தெரிகிறது.

உத்தேச பிளேயிங் லெவன்

இந்தியா

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ்/ அக்‌ஷர் படேல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.

வங்தேசம்

ஷாத்மன் இஸ்லாம், ஜாகிர் ஹாசன், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), மோமினுல் ஹக், முஷ்ஃபிகுர் ரஹிம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹாசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், ஹாசன் மஹ்முத் மற்றும் டஸ்கின் அகமது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் உரையாடல்!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 3 பேர் கைது

யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!

அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர்?

ரூ.232 கோடி மோசடி! இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மேலாளர் கைது!

SCROLL FOR NEXT