இரண்டாவது டெஸ்ட்: இந்தியா முதலில் பந்துவீச்சு!
இந்தியா - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பற்றி...
கிரிக்கெட்இரண்டாவது டெஸ்ட்: இந்தியா முதலில் பந்துவீச்சு!
இந்தியா - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பற்றி...
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியினர், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றனர். ஏற்கெனவே சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதற்காக சுண்டப்பட்ட டாஸில் இந்திய அணி வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
அணி விவரம்
இந்திய அணியை பொறுத்தவரை எவ்வித மாற்றமும் இன்றி முதல் டெஸ்ட்டில் விளையாடிய வீரர்களே களமிறங்குகின்றனர்.
வங்கதேச அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நஹித் ராணாவுக்கு பதிலாக தஜாவால் இஸ்லாமும், டாஸ்கின் அகமதுக்கு பதிலாக காலித் அகமதும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.