முகப்பு
கிரிக்கெட்

கடைசி டி20: ஹர்மன்பிரீத் கௌர் அரைசதம்; இலங்கைக்கு 176 ரன்கள் இலக்கு!

இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 30 டிசம்பர், 2025 at 4:04 PM
அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் ஹர்மன்பிரீத் கௌர் - படம் | பிசிசிஐ
பகிர்:

இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - இலங்கை இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று (டிசம்பர் 30) நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்தியா முதலில் பேட் செய்தது.

Advertisement

முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் அதிகபட்சமாக 43 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அருந்ததி ரெட்டி 27 ரன்களும், அமன்ஜோத் கௌர் 21 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் கவிஷா தில்ஹாரி, ரஷ்மிகா செவ்வந்தி மற்றும் சமாரி அத்தப்பத்து தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நிமிஷா மதுஷானி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.

summary

In the last T20 match against Sri Lanka, the Indian team, batting first, scored 175 runs for the loss of 7 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments