வருண் சக்கரவர்த்தி படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து சிறப்பாக செயல்படும்: கெவின் பீட்டர்சன்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

DIN

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தத் தொடர் முழுவதுமே இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் மிகவும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

கெவின் பீட்டர்சன் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். ஏனெனில், அவர்கள் களத்தில் நீண்ட நேரம் செலவழித்து ஆட முடியும். ஒருநாள் போட்டிகள் நீண்ட வடிவிலானவை என்பதால் அனைத்துப் பந்துகளையும் அதிரடியாக விளையாட வேண்டும் என்பதில்லை. இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளது மிகச் சிறந்த முடிவு என நினைக்கிறேன் என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT