ஹாரிஸ் ரௌஃப் படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.

DIN

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் அதிகமாக காணப்படும். குறிப்பாக, ஐசிசி தொடர்களில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த முறையும் அத்தகைய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை மறுநாள் (பிப்ரவரி 23) நடைபெறும் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது போட்டிக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

எந்த ஒரு அழுத்தமும் இல்லை

நாளை மறுநாள் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறோம் என்ற எந்த ஒரு அழுத்தமும் இல்லை என பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளோம் என்ற அழுத்தம் எங்களுக்கு இல்லை. அனைத்து வீரர்களும் ரிலாக்ஸாக இருக்கிறார்கள். மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் விளையாடவுள்ளோம்.

துபையில் இந்திய அணியை இரண்டு முறை இதற்கு முன்பாக வீழ்த்தியுள்ளோம். அதனால், துபை ஆடுகளங்களின் தன்மை எப்படி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். போட்டி நாளன்று ஆடுகளத்தின் தன்மையைப் பொருத்தே எங்களது அனைத்து திட்டங்களும் இருக்கும். அணியில் சைம் ஆயூப் மற்றும் ஃபகர் ஸமான் இல்லாதது எங்களுக்கு பின்னடைவாக உள்ளது. ஆனால், சிறப்பாக செயல்பட்டு போட்டியை வென்றுக் கொடுக்கும் வீரர்கள் அணியில் இருக்கிறார்கள் என்றார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரவைத் தோ்தலில் போட்டியிட திமுகவிடம் 5 இடங்கள் கேட்போம்: முஸ்லீம் லீக் தலைவா் காதா்மைதீன்

வானவில் மன்றத்தில் அறிவியல் விழிப்புணா்வு செயல்பாடுகளை மேற்கொள்ள முடிவு!

குடிநீா் பிரச்னையை சீா் செய்யாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம்

கந்தா்வகோட்டை வட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தூய்மைப் பணி

திருச்சி காப்புக்காடுகளில் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT